பிக்பாஸ் சீசன் 7 வீட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏழரையைக் கூட்டி விடுகிறார்கள் போட்டியாளர்கள். இன்னைக்கு என்ன இன்னைக்கு என்ன.. என ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு சரியான சம்பவம் இன்று இரவு காத்திருக்கிறது. 


டெய்லி யாராவது ஒருவரை டார்கெட் செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து கேம் ஆடிவரும் பிரதீப்பிடம் இன்று சிக்கி கொண்டது நம்ம கூல் சுரேஷ் தான். இந்த சீசன் தொடங்கிய முதல் ஒன்று இரண்டு வாரங்களில் தோஸ்துகளாக இருந்த பிரதீப்பும் கூல் சுரேஷும் இப்போது வெறித்தனமா அடித்துக் கொள்கிறார்கள்!


 



பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் 30ஆவது நாளுக்கான இன்றைய முதல் ப்ரோமோவிலேயே பிரதீப்புக்கும் கூல் சுரேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றிய நிலையில், தன்னுடைய பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துக்கொண்டு நான் வெளியேறுகிறேன் என கூல் சுரேஷ் கிளம்புவது போல காட்டப்பட்டது. 


அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கூல் சுரேஷ் எப்பவுமே சொல்லும் தமிழன்டா டயலாக்கை பிரதீப் கொச்சைப்படுத்த இருவரும் இடையில் சண்டை முற்றுகிறது.


"தமிழன்டா வா... ச்சீ.." என பிரதீப் சொல்ல விஷ்ணு "உனக்கு என்ன டா" எனக் கேட்க "அப்படி தான் பேசுவேன்" என பிரதீப் சொல்ல "அப்படினா திருப்பி பேசுவோம்" என விஷ்ணு சொல்கிறார். கார்டன் ஏரியாவில் அவர்கள் சண்டை போடும் சத்தம் கேட்க, வீட்டுக்குள் இருந்த அனைவரும் பதறி அடித்துக்கொண்டு ஓடி வருகிறார்கள். 


 



மரியாதை இல்லாமல் பிரதீப் பேசுவதை கூல் சுரேஷ் தட்டிக் கேட்க "சில்லறை பய" என அவரை அவமரியாதையாக பிரதீப் பேச "யார் அவர் சில்லறை பையனா?" என கூல் சுரேஷுக்கு சப்போர்ட்டாக விஷ்ணு பேசுகிறார். "சில்லறை பையன் தான் அவன்" என பிரதீப் சொல்ல "வாடா போடான்னு எல்லாம் பேசுன அவ்வளவு தான்" என கூல் சுரேஷ் எகிறி கொண்டு போகிறார். "அப்படி தாண்டா பேசுவேன்" என மீண்டும் பிரதீப் திமிராக பேச "செருப்பால அடிப்பேன்" என கூல் சுரேஷ் கத்துகிறார். 


அதற்கு பிறகு யார் சமாதானமாக பேச வந்தாலும் அவர்களையும் மரியாதை இல்லாமல் பேசுகிறார் பிரதீப். 


கூல் சுரேஷை சமாதானப்படுத்த முயற்சிக்கையில் ஆத்திரத்தில் இருந்த அவர் "உங்களை அசிங்க அசிங்கமா பேசுவான் நீங்க அமைதியா இருப்பீங்க. அப்படி தானே" என கேட்கிறார். "ஒரே ஒரு சாரி கேளு" என அனைவரும் பிரதீப்பை பார்த்து சொல்ல "உன்னுடைய வேலையை பாத்துட்டு போ மா" என அடக்கி விடுகிறார் பிரதீப். 


 



அனல் தெறிக்கும் இந்த ப்ரோமோ பிக் பாஸ் ரசிகர்களுக்கிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே எண்டர்டெயின்மெண்ட்டுக்காக நடக்குதா இல்லை இது கலவர பூமியா என்பதே தெரியவில்லை.