பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போர்க்களமாகவே இருக்குறது. அந்த வகையில் நேற்றைய டாஸ்கில் 'பேட்டரி டெட்' என்ற ஒரு வில்லங்கமான டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ். மேலும் ஒரு ட்விஸ்ட்டாக இந்த டாஸ்க்கை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு இரண்டு கோல்ட் ஸ்டார்கள் வழங்கப்படும் என அறிவித்தார். சும்மாவே நம்ம பயலுங்க அடிச்சுப்பானுங்க... இப்போ இரண்டு கோல்ட் ஸ்டார் என பிக் பாஸ் சொன்னதும் ரணகளமாக மாறியது பிக் பாஸ் வீடு. 


முதல் சுற்றிலேயே யுகேந்திரன், மணி, பிரதீப் வெளியேற, இரண்டாவது சுற்று ஆரம்பித்ததும் ஓட்டம் பிடித்தனர் போட்டியாளர்கள். ரவீனாவை மாயா டார்கெட் செய்ய, விக்ரம் மாயாவோடு மல்லுக்கு நிற்கிறார். ஆனால் ரவீனாவோ மாயா பூர்ணிமா மீதும் குறி வைத்து அவர்கள் இருவரையும் அலேக்காக வீழ்த்தினார். இரண்டாவது சுற்றின் முடிவில் விசித்ரா, ரவீனா, பூர்ணிமா மற்றும் மாயா வெளியேறினார்கள். 


அடுத்த சுற்றில் அக்ஷயாவை தூக்க பிளான் போட்டார்கள் ஐஷு மற்றும் நிக்சன். விஷ்ணு ஓடி வந்து கீழே விழுந்து “நீ தான் என்னை தள்ளி விட்ட” என பச்சை பாப்பாவாட்டம் சண்டையிட்டார். ஆவேசத்தில் வார்த்தைகள் தடம் புரள விஷ்ணுவுக்குள் ஒளிந்திருந்த அந்த மிருகம் வெளியே வந்தது. ஒரு வழியாக அந்த டாஸ்க் முடிவு பெற்றது. அதன் வெற்றியாளராக ஜோவிகா இரண்டு கோல்ட் ஸ்டார்களை கைப்பற்றினார். 


இப்படி கலவரமாக நடக்கும் பிக்பாஸ் வீட்டில் சில அழுகாச்சி காட்சிகளும் அவ்வப்போது நடைபெறும். அந்த வகையில் 24ஆம் நாளுக்கான இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மாயா விக்ரமிடம் தனது மனக்குமுறலை கொட்டுகிறாள். 


"மாயா வந்து இப்படி நெகட்டிவா பண்ணுவா. அவளோட பர்சனாலிட்டியே நெகடிவ். இப்படி எல்லாம் மற்றவர்கள் பேசும்போது நானே என்னை கேள்வி கேட்டு கொள்கிறேன். இவங்க எல்லாம் யாரு ப்ரோ... விளையாடலைனா கிளம்ப சொல்லுங்க. என்ன தெரியுமா பண்ணறாங்க... இங்க வந்து வாழ வந்து இருக்காங்க... எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு, தூங்கிட்டு, கேமரா கிட்ட பேசிகிட்டு போக நான் வரல. நான் இங்க விளையாட வந்து இருக்கேன். இதுவே ஒரு பையன் பண்ணி இருந்தா அவனைக் கொண்டாடி இருப்பாங்க. நான் செம்ம வீக். அதெல்லாம் காட்டக் கூடாதுன்னு இருக்கேன். நானும் மனுஷி தானே.. எனக்கு புரியவே இல்லை... " என சொல்லி மாயா கண்கலங்குகிறார்.


 



மிகவும்  ஸ்ட்ராங் போட்டியாளராக இருக்கும் மாயாவின் இந்த மனக்குமுறலுக்கு என்ன காரணம்? இதை எல்லாம் ஏன் விக்ரமிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார் மாயா? ஆனால், இன்றைய டார்கெட் மாயா தான் என்பது வெளியான இந்த ப்ரோமோ மூலம் தெரிகிறது!