பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் 10 வது நாளான இன்று கோல்ட் ஸ்டார் டாஸ்கின் தொடர்ச்சி நடைபெற்றது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் பேசியது மட்டுமே எபிசோடில் ஒளிபரப்பானது. அந்த வகையில் ஒவ்வொருவரும் அவர்களின் வாக்குகளை தெரிவித்தனர். அதில் ஜோவிகா பிரதீப்புக்கு தன்னுடைய  வாக்கை அளித்தார். பிரதீப் லூசு தனமாக பேசினாலும் என்ன செய்தாலும் ரசிகர்கள் மத்தியில் அவர் இன்னைக்கு என்ன செய்ய போகிறார் என்ற ஆர்வம் இருப்பதால் நிச்சயம் அவர் ஒரு சுவாரஸ்யமான போட்டியாளர் என கூறினார். 


 



பூர்ணிமா இது குறித்து தனக்கு இருந்த சந்தேகத்தை பிக் பாஸிடம் கேட்க அவர் ஒரே வார்த்தையில் ஜோவிகா சொன்னது சரி என சொல்லவே தனக்கு அவர் மொக்கை கொடுத்துவிட்டார் என சொல்லி வருத்தப்படுகிறார் பூர்ணிமா. இறுதியில் விஷ்ணு, பிரதீப், ரவீனா, யுகேந்திரன், மணி, நிக்சன் என அனைவருமே கூல் சுரேஷுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறசெய்தனர். அதனால் இந்த வாரம் கோல்ட் ஸ்டார் வென்றவர் கூல் சுரேஷ்.


பிரதீப் - நிக்சன் மோதல்: 


பிரதீப் - நிக்சன் இடையே பெரிய சண்டை ஏற்படுகிறது. பிரதீப் நிக்சனை பார்த்து "நீ பேசாத உனக்கு தகுதி இல்லை" என சொன்னது பெரிய வாக்குவாதத்தையும் அதனால் மோதலும் வெடித்தது. மாறி மாறி ஒருவரையொருவர் வார்த்தையால் தாக்கி கொண்டனர். பிரதீப் யாரையாவது வம்புக்கு இழுத்து அதை கன்டெண்ட்டாக மாற்ற வேண்டும் என்று தான் பார்க்கிறார். பிறகு அனைவரும் சேர்ந்து நிக்சனை சமாதானம் செய்து ஆறுதல் படுத்தினார்கள். இது பிரதீப் கேம் என்பதை புரிந்து கொண்டார் நிக்சன். பின்னர் நிக்சனும் பிரதீப்பும் பேசி சமாதானமாகிறார்கள். 


 




ஜாலியான மார்னிங் சீக்வென்ஸ்: 


விசித்திரா சின்ன சின்ன விஷயத்துக்கு கூட மற்றவர்களை குறை சொல்லி எரிச்சல் வரவைக்கிறார். அதிலும் சமையல் விஷயத்தில் விசித்திரா செய்வது கொஞ்சம் ஓவராகவே இருந்தது. தினமும் என்ன சொல்லலாம் என யோசித்து கொண்டே இருப்பார் போல இருக்கிறது. ஆனால் அந்த மார்னிங் சீக்வென்ஸ் மாயாவுக்கும், விசித்திராவுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் கொஞ்சம் ஜாலியாக இருந்தது. சேமியாவில் மரியாதை எப்படி போடுவது என கூல் சுரேஷ் சொன்னது சிரிப்பாக இருக்கிறது. 


அடக்கி வாசித்த விஷ்ணு: 


ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை காலை 6 மணிக்கு எழுப்ப வேண்டும் என்பது ரசிகர்களை கோரிக்கை என சொல்லி எழுப்பிவிட்டு அவர்களை டென்ஷனாகி விடுகிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக சவுண்ட் விட்ட விஷ்ணு இன்று கொஞ்சம் அடக்கி வாசித்த மாதிரி இருந்தது. அவரின் பேச்சு எடுபடவில்லை என்பதால் இந்த மாற்றம் வந்து இருக்கலாம் என தோன்றியது. 


 



ஓரங்கட்டப்பட்ட விசித்திரா : 


பிக் பாஸ் வீட்டில் இருவர்களுக்கு ஒரு கேம் வைக்கப்பட்டது. அதில் விசித்திரா ஓரங்கட்டப்பட்டதும் டென்ஷனாகி விடுகிறார். திரும்ப திரும்ப அவர் வாய்ப்பு கேட்ட போது ஒரு முறையாவது கொடுத்து இருக்கலாம். எப்படியோ இரண்டாவது முறை கேம் விளையாட டீம் வெற்றி பெற்று விடுகிறது. 


பிக் பாஸ் வீட்டில் 10 நாள் சண்டையும் சமாதானமும் எந்த அளவிற்கு இருந்தது அதே அளவிற்கு ஸ்வாரஸ்யமும் இருந்தது.