பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான எழுத்தாளர் பவா செல்லதுரை கதை ஒன்றை சொன்ன நிலையில், அதைக்கேட்டு கூல் சுரேஷ் அழுதார். 


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி


கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். நடப்பு சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, அக்‌ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா ஆகிய 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். 


கதை சொன்ன பவா செல்லதுரை 


இப்படியான நிலையில் நேற்று முதல் நாள் எபிசோட் ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்களில் ஒருவரான எழுத்தாளர் பவா செல்லதுரை கதை ஒன்றை சொன்னார். அதாவது, “டெல்லியில ஒரு மிடில் கிளாஸ் அம்மா குடும்பத்துல 3வது படிக்கிற பையன் இருப்பான். அவன் டிபன் பாக்ஸை டைனிங் டேபிள் மேலேயே வச்சிட்டு போயிடுவான். நடந்து போன பஸ் ஸ்டாப்புக்கு 10 நிமிஷத்துல போய் கொடுக்கலாம். ஓடிப்போனா 5 நிமிஷம் தான் ஆகும். டிபன் பாக்ஸ் எடுத்துட்டு அந்த அம்மா வேக வேகமா ஓடும். அந்த ஏரியால இருக்க மக்கள் எல்லாம் பார்ப்பாங்க, இந்த அம்மா கல்யாணம் பண்ணி குழந்தை வந்த பிறகு ஓடுதுன்னு சொல்வாங்க. ஆனால் அந்த அம்மா எதைப்பத்தியும் கவலைப்படாம ஓடிப்போய் பஸ் ஸ்டாப்ல கிளம்ப தயாரா இருக்கும் பையன் கிட்ட “கண்ணு டிபன் பாக்ஸை மறந்துட்டு போற”ன்னு சொல்லி கொடுப்பாங்க. அந்த பையன் அதை வாங்கிட்டு டாட்டா சொல்லிட்டு போயிடுவான். 






திரும்பி வரும்போது அந்த அம்மா நிதானமாக நடந்து வரும்போது தன்னை வேடிக்கை பார்த்தவர்களை பார்ப்பாள். தன்னை கிண்டல்,கேலி பண்ணாங்களே என அவள் ஃபீல் செய்ய மாட்டாள். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் கண் கலங்குவாள். இப்படி ஓடும் அப்பெண் தான் உயர்நிலை பள்ளியிலும், கல்லூரியிலும் ஓட்டப்பந்தயத்துல எப்பவுமே முதல் பரிசு பெறுபவர். அதுதான் அப்பெண்ணுக்கு எப்பவும் நியாபகம் வரும். அந்த ஓட்ட வாழ்க்கையை லவ்திக வாழ்க்கை தடை பண்ணிடும். 


கணவருக்கு அறை கதவை திறந்து விடுவதும், குழந்தைகளுக்கு உணவு செய்துக் கொடுத்து வாழ்க்கை மாறிவிடும் அப்பெண்ணுக்கு, இயற்கையே தன் குழந்தைக்காக மீண்டும் “ஓட” வைத்திருக்கும். அப்பெண் ரொம்ப சந்தோசப்பட்டிருப்பா. எந்த நாய் எப்படி நினைச்சாலும் பரவாயில்ல, என்னுடைய இளமை கால ஓட்டத்தை எல்லாம் நான் மீட்டெடுப்பேன் என சொல்வாள். அடுத்த நாள் அப்பெண் சமைச்சிட்டு இருப்பா, அந்த பையன் வழக்கம்போல டாட்டா சொல்லிட்டு போயிடுவான். டிபன் பாக்ஸ் அதே டைனிங் டேபிள் மேலே இருக்கும். 


அப்பெண்ணுக்கு உலக சந்தோசமா இருக்கும். இன்னைக்கும் நம்ம டிபன் பாக்ஸ் எடுத்துட்டு நம்ம ஓடலாம் என நினைக்கும்போது, அந்த பையன் உள்ளே வந்து பாக்ஸ் எடுக்க வந்துருவான். அவளுக்கு உலகமே வெறுத்த மாதிரி உணர்வு ஏற்படும்.ஆனாலும் டிபன் பாக்ஸை பையன் கையில கொடுத்துட்டு அவன் தலையை கோதி அந்த ஓடி வரும் நிகழ்வை தெரிவிப்பார். 


நான் ஏன் இந்த கதையை சொல்கிறேன் என்றால், யாரும் கல்யாணம் பண்ணிகாதீங்க, குழந்தை பெத்துக்காதீங்கன்னு சொல்லல. எல்லோரும் கலையுடன் சம்பந்தப்பட்டவர்கள். பெண்களை குடும்பம் என்கிற அன்பின் வன்முறை அடக்கி போட்டுவிடும். ஆனால் நமக்கு பின்னால் குடும்பம், கணவன், பிள்ளைகள் நிற்க வேண்டும் என்ற உணர்வோடு நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என கதை சொன்னார். 


கண்கலங்கிய கூல் சுரேஷ்



இதைக்கேட்டு கண் கலங்கி பேசிய கூல் சுரேஷ், “நான் 10வது தான் படித்திருக்கின்றேன். எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் வீட்டுக்கு போவேன்,வருவேன். பசங்களை படிக்கிற விஷயத்தில் கண்டிப்போடு தான் நடந்து கொள்வேன். நானும் அப்படியே எந்த கவலையும் இல்லாமல் ஜாலியா இருக்கிறேன். ஆனால் மனைவி வந்து ஒரு மனிதனுக்கு ரொம்ப முக்கியம்” என தெரிவித்தார்.