பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின்  முதல் நாமினேஷன் குறித்த மூன்றாவது ப்ரோமோ(Bigg Boss 7 Tamil) வெளியாகியுள்ளது.


தொடங்கிய பிரச்னை


விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸின் 7ஆவது சீசன்(Bigg Boss Tamil Season 7) நேற்று கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசன் நேற்றைய முதல் எபிசோடைத் தொடங்கிவைத்த நிலையில், மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்கு வருகை தந்துள்ளனர்.


இந்நிலையில், நேற்றைய முதல் நாளே முதல் போட்டியாளர் தொடங்கி கேப்பிடன்ஸி டாஸ்க் பிக் பாஸால் வழங்கப்பட்டு, போட்டியாளர்களுக்கு இடையே முதல் நாளே சண்டை மூட்டி விடும் வேலை பிக்பாஸால் தொடங்கி வைக்கப்பட்டது!


கொளுத்திப்போடும் பிக்பாஸ்..


இந்த வார கேப்டனாக கடைசியாக வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த விஜய் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் விஜய் வர்மா நோகாமல் கேப்டன் பதவியை இந்த டாஸ்க் மூலம் சொந்தமாக்கிக் கொண்டதாக ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.


தொடர்ந்து இன்று காலை முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ப்ரொமோக்கள் வெளியாகி வருகின்றன. முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் இரண்டு வீடுகள் உள்ள நிலையில், இரண்டாவது ஹவுஸூக்கு ஸ்மால் பாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.


ஸ்மால் பாஸ் ஹவுஸா, சிறைச்சாலையா?


அங்கு இந்த வார கேப்டன் விஜய்யை குறைவாக கவர்ந்திழுத்த நெக்ஸன், ஐஷூ, வினுஷா, ரவீனா, பவா செல்லதுரை, அனன்யா ஆகிய ஆறு போட்டியாளர்கள் அனுப்பப்பட்டனர். ஸ்மால் பாஸ் ஹவுஸ் கிட்டத்தட்ட சிறைச்சாலை போன்ற கட்டுப்பாடுகளுடன் இயங்கும் நிலையில், அங்கு சென்ற அவர்களுடன் பிக்பாஸ் பேசமாட்டார்.


வீட்டினை விட்டு வெளியே போகக்கூடாது, இவர்கள் தான் பாத்ரூமை கழுவ வேண்டும், சமைக்க வேண்டும், மெனு அவர்களுக்கு பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களால் கொடுக்கப்படும் என ஏகப்பட்ட  கண்டிஷன்கள் போடப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆறு பேரும் உள்ளுக்குள்ளேயே இந்த வார கேப்டன் விஜய்யை மனதுக்குள் இந்நேரம் குமுறிக்கொண்டு இருப்பார்கள்!


சூடிபிடிக்கும் முதல் நாமினேஷன்


இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள 3ஆவது ப்ரொமோவில் இந்த பிக் பாஸ் சீசனின் முதல் நாமினேஷன் பற்றிய சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


அதில்  பிக்பாஸ் ஹவுசில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும் என்றும், ஸ்மால் பாஸ் ஹவுசில் இருப்பவர்கள் பிக்பாஸ் ஹவுசில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும் என்றும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.


அதன்படி கூல் சுரேஷூம் பவா செல்லதுரையும் ஒருவரை ஒருவர் மாறி மாறி நாமினேட் செய்துகொண்டனர். மேலும் ஜோவிகா தன்னிடம் பாஸியாக பேசியதாக ஐஷூவும், ஐஷூவை ஜோவிகாவும் மாறி மாறி நாமினேட் செய்துகொண்டனர். ஜோவிகா தன்னிடம் பாஸியாக பேசியதாக ஐஷூ தெரிவித்துள்ளார்.


 



முதல் நாளே கேப்பிடன்ஸி டாஸ்க் சண்டை, பிக் பாஸ் - ஸ்மால் பாஸ் ஹவுஸ் பிரச்னை, நாமினேஷன் என இந்த சீசனில் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.