விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 விரைவில் துவங்க உள்ளது. அதற்கான விளம்பரங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. 


உச்சத்தில் டி.ஆர்.பி ரேட்டிங் :


கடந்த ஆறு சீசன்களாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியினை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன். அவருக்காகவே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். சனி மற்றும் ஞாயிறு மட்டுமே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி ரேட்டிங் உச்சத்தில் இருக்கும் அதற்கு காரணம் உலகநாயகன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 


 



அதிகரிக்கும் ஆர்வம் :


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மிக விரைவில் பிரபலமாகி விடுவார்கள். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் இந்த பிக் பாஸ் 7வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 


போட்டியாளர்களின் பட்டியல் :


பாலிமர் நியூஸ் ரீடர் ரஞ்சித், மாடல் நிலா, நடிகர் சந்தோஷ் பிரதாப், காக்கா முட்டை விக்னேஷ், நடிகர் பப்லு பிரிதிவ்ராஜ், நடிகை சோனியா அகர்வால், நடிகர் அப்பாஸ், நடன அமைப்பாளர் ஸ்ரீதர், தர்ஷா குப்தா, விஜே பார்வதி, ரேகா நாயர், நடிகர் கல்லோரி அகில், நடிகை அம்மு அபிராமி, வி.ஜே. ரக்ஷன், ஜாக்குலின், பேருந்து ஓட்டுநர் சர்மிளா, நடிகர் தினேஷ் (ரட்சிதா கணவர்), மாடல் ரவிக்குமார். இந்த பதினெட்டு பேர் தான் இந்த பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் என இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 


ஆனால் வெளியாகியுள்ள இந்த பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை சேனல் வெளியிடவில்லை. பிக் பாஸ் 7 சீசன் அக்டோபர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. அதே போல இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கும் என்பதை விளம்பரமே உறுதி செய்துள்ளது. விரைவில் முழு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.