விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பானது. 


100 நாட்கள் :


ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் 100 நாட்களுக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் வெளி உலகத்தோடு எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் ஒன்றாக வீட்டுக்குள் வசிக்க வேண்டும். இதற்கிடையே அவர்களுக்கு சில டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அந்த டாஸ்க்குகளை சிறப்பாக செய்பவர்கள் மற்றும் போட்டியில் இறுதி வரை நிலைத்து நிற்கும் போட்டியாளர்களில் ஒருவர் மக்களின் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகம் பெற்றவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார். ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்படுவார். 



 


பிக்பாஸ் போட்டியாளர்கள் :


மிகவும் ஸ்வாரஸ்யமாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை கடந்த ஆறு சீசன்களாக மிக சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் உலக நாயகன் கமல்ஹாசன். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்கள் எளிதில் பிரபலமாகி விட முடியும் என்பதால் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவார்கள். 


முன்னர் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், சேனலில் பிரபலமானவர்கள், மாடலிங் துறையை சார்ந்தவர்கள், பாடகர்கள், நடன கலைஞர்கள், சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் முகங்கள் இப்படி பல விஷயங்களின் அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வு செய்ய படுவார்கள். 


 



 


முதல் போட்டியாளர் யார் ?


அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வு மிகவும் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் முதல் போட்டியாளர் குறித்த விவரம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. 


90'ஸ் கிட்ஸ்கள் மத்தியில் ஒரு ரோமியோவாக வலம் வந்த சாக்லேட் பாய் அப்பாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்ட நடிகர் அப்பாஸ் சில மாதங்களாக இந்தியாவில்தான் இருக்கிறார். சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 நிகழ்ச்சியில் கூட சமீபத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார் என்பது தெரிந்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 


கடந்த ஆறு சீசன்களை காட்டிலும் இந்த பிக் பாஸ் சீசன் 7 இரண்டு வீடுகளோடு வெவ்வேறு குணாதிசயம் கொண்ட போட்டியாளர்களோடு களைகட்ட போகிறது.