பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா தன் உடம்பில் இருக்கும் டாட்டூவை காட்டச் சொல்லி வற்புறுத்தியதாக சக போட்டியாளர் அனன்யா ராவ் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 


சின்னத்திரையில் ரசிகர்களிம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதேசமயம் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் வழக்கம்போல தொகுத்து வழங்கி வருகிறார். இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையும்,  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. 


மேலும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலை செய்யப்படுகிறது. அதேபோல் விஜய் டக்கர், விஜய் சூப்பர் ஆகிய சேனல்களிலும் மறு ஒளிபரப்பானது செய்யப்படுகிறது. ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாவதால் டிவியில் காட்டப்படாத காட்சிகள் கூட சமூக வலைத்தளங்களில் எளிதாக கிடைக்கிறது. நடப்பு சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை,  சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ,  விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா, அக்‌ஷயா உதயகுமார்,  வினுஷா தேவி ஆகிய 18 போட்டியாளர்கள்  கலந்து கொண்டுள்ளனர். 


இப்படியான நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை விசித்ரா மீது சக போட்டியாளர் அனன்யா ராவ் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 






இதுதொடர்பான வீடியோவில் அனன்யா, “என் உடம்பில் போடப்பட்டிருக்கும் டாட்டூஸ் பத்தி நிறைய பேரு பேசுறாங்க. இன்னைக்கு காலையில விசித்ரா அம்மா வந்து என் இடுப்பின் பின்பக்கத்தில் இருக்கும் டாட்டூவை காட்டுமாறு கூறினார். அவர் எதற்கு கேட்டார் என்பது எனக்கு தெரியும். அதனால் வேண்டுமென்றே காட்டினேன்” என பவா செல்லதுரையிடம் கூறுகிறார்.


தொடர்ந்து பவா செல்லதுரை எச்சில் துப்புவது தொடர்பாக பிரதீப் ஆண்டனி பிரச்சினை ஒன்றை எழுப்பியிருந்தார். அது பிக்பாஸ் ப்ரோமோவிலும் காட்டப்பட்டிருந்தது. அதனை குறிப்பிட்டு, “எனக்கு நீங்கள் சொன்ன கதையில் இருந்து என்ன புரிந்தது என்றால், நீங்கள் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. (வீட்டில் பவா செல்லதுரை சொன்ன கதையை குறிப்பிட்டு பேசுகிறார்) இது உங்களுடைய வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதில் என்ன தப்பு இருக்கிறது. இங்க இருக்க சின்ன பசங்க நீங்க (பவா செல்லதுரை) பண்றதை பார்த்து விட்டு என்னென்ன நினைப்பாங்கன்னு சொல்றாங்க. அப்படிதான் ஆகும் என்றால் எவ்வளவோ கதைகள் இருக்கு, மூவிஸ் இருக்கு. அப்படி எல்லாம் மாறணும் என்றால் அதை பார்த்தும் நடக்கணும்ல என தெரிவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை பதிவிட்டுள்ள இணையவாசிகள் பலரும் அனன்யா மிகவும் அப்பாவியானவர் என சில்லறையை சிதற விட்டு வருகின்றனர். 




மேலும் படிக்க: Watch Video: இத்தாலியில் நடந்த கார் டூரில் விபத்தில் சிக்கி உயிர்தப்பிய ஷாருக்கான் பட நடிகை..!