Bigg Boss 6 Tamil : 6 சீசனில் இந்த வாரம் வெளியேற பரிந்துரைக்கப்பட்ட 7 பேர்!
Bigg Boss 6 Tamil :அதிகமான குறை கொண்ட போட்டியாளர்களை நாமினேட் செய்வதை வழக்கமாக கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தவாரம்....

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்களாக, ஏடிகே, வி ஜே மகேஸ்வரி, ராம் ராமசாமி, அசிம், விக்ரமன், தனலட்சுமி, ஆயிஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று, பிக்பாஸ் போட்டியாளர்களில் பலர் கமலிடம் நன்றாக வாங்கிக்கொண்டனர். அதை தொடர்ந்து, ஆயிஷாவுடன் சுற்றி கொண்டிருந்த ஷெரினா சாம் குறைந்த ஓட்டுகளை பெற்று போட்டியை விட்டு வெளியேறினார்.
Just In




அதிகமான குறை கொண்ட போட்டியாளர்களை நாமினேட் செய்வதை வழக்கமாக கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தவாரம் ஏடிகே, வி ஜே மகேஸ்வரி, ராம் ராமசாமி, அசிம், விக்ரமன், தனலட்சுமி, ஆயிஷா ஆகியோரை எலிமினேஷனுக்காக நாமினேட் செய்தது. இவர்களில் மிக குறைந்து ஓட்டுகளை பெறுபவர், இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறுவார்.
கடந்த வாரத்தில், அசிம், ஆயிஷா, ஷெரின், கதிரவன் மற்றும் விக்ரமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த வாரத்திலும் அசிம், ஆயிஷா, தனலட்சுமி மற்றும் விக்ரமன் ஆகிய நால்வரும் மீண்டும் நாமினேட் ஆகியுள்ளனர். இதற்கு காரணம், சக போட்டியாளர்களுடன் ஏற்ப்பட்ட சண்டைகளும் மன கசப்புகளும்தான்.
உஷார் ஆன ஆயிஷா, பாட்டரி போட்ட பொம்மை போல் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டார். அவரே தானாக வந்து, இந்த வார கேப்டன் மைனா நந்தினியிடம், க்ளீனிங் டீம் தலைவர் பொறுப்பை கொடுங்கள் என கேட்டு வாங்கியுள்ளார். இதை கண்ட சக போட்டியாளர்கள், அவரின் மாற்றத்தை வரவேற்றுள்ளனர். அதனால், இவர் எலிமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்று நினைத்துள்ளார் போல..
பிக் பாஸ் போட்டியாளர்கள் :
இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 17 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil: ‛இவங்க ரவுசு தாங்க முடியல...’ இந்த சீசனில் ரொமாண்டிக் ஜோடி இவர்கள்தானா?