பிக்பாஸில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கில் எத்தனை பேரு சோகக்கதை சொல்லப் போறாங்களோ என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதனையடுத்து 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சீசன் ஆரம்பம் முதலே நல்ல விறுவிறுப்பாக சென்றது. 


இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை மைனா நந்தினி உள்ளே வந்துள்ளார். 






இதனைத்தொடர்ந்து நேற்று முதல் வார நாமினேஷன் வைபவம் தொடங்கியது. இதில் விக்ரமன், குயின்ஸி, சாந்தி, ஆயிஷா, அஸீம், தனலட்சுமி, நிவா, ரச்சிதா, ராம், ஷெரினா, ஷிவின் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான டாஸ்க் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


அதில் டாஸ்க்கின் பெயர் “கதை சொல்லும் நேரம்” எனவும், குறிப்பிட்ட நேரத்திற்குள் கதை சொல்ல முடிப்பவர்கள் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. இதில் நடிகர் அஸீம் குறிப்பிட்ட நேரத்திற்குள் தனது கதையை சொல்லி முடிக்காமல் இருக்கிறார். மேலும் அவர் தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை சொல்லி கண் கலங்குகிறார். இப்படி இன்னும் எத்தனைப் பேர்  கதை சொல்லி அழப்போகிறார்களோ என தெரியவில்லை. எல்லோருக்கும் வாழ்க்கையில் சோகம், சவால்கள் இருக்கும்.அதனை எப்படி கடந்து செல்ல வேண்டும் என மோட்டிவேஷனல் கதை சொன்னால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.