சரவணன் மீனாட்சி பிரபலம் மைனா நந்தினி, பிக் பாஸ் ஆறாவது சீசனின் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக களம் இறங்கியுள்ளார். பிக்பாஸ் சீசன் 6-ல் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகிய 20 நபர்கள் பங்கேற்றுள்ளனர்.
20 நபர்கள் பிக் பாஸ் வீட்டினுள் இருக்க, இந்த வாரம் ஒரு நபர் நிச்சயம் எலிமினேட் செய்யப்படுவார். சாந்தி, குயின்சி, விக்ரமன், ஆயிஷா ஆகிய நான்கு போட்டியாளர்கள், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், யார் இருப்பதிலே குறைந்த ஓட்டிகளை பெறுகிறார்களோ அவர்களே, எலிமினேட் செய்யப்படுவார்கள்.
பொதுவாக, முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரி போட்டியாளர், ஒரு மாததிற்கு பிறகுதான் பிக் பாஸ் வீட்டில் நுழைவர். ஆனால், இம்முறை யாரும் வெளியே செல்லாத நிலையில் மைனா நந்தினி உள்ளே சென்றுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ ஆம், நான் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளேன் செல்லக்குட்டிகளே. உங்களின் ஆதரவும் அன்பும் எனக்கு வேண்டும் மக்களே. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய விஜய் தொலைக்காட்சிக்கும், பிரதீப்மில் ராய் பாஸுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.” என அவரின் கருத்தை பதிவிட்டு இருந்தார்
சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி மூலம் பிரபலமாகி பின்னர், அரண்மனை கிளி, கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, அரண்மனை 3, விக்ரம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க : AK 62 : அடுத்த ஒன்றரை ஆண்டுக்கு நடிக்க போவதில்லை.. அஜித் எடுத்த அதிரடி முடிவு... காரணம் இது தான்!