Bigg Boss Tamil Season 6 Starting Date: பிக்பாஸ் சீசன் 6 எப்போது தொடங்கும் என்பது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

Continues below advertisement


தமிழில் விஜய்தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட  பிக்பாஸ் சீசன் 4 மற்றும் சீசன் 5 அக்டோபர் மாதத்தில் தொடங்கியது போல் இந்த சீசனும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே பிக்பாஸ் சீசன் 6(Bigg Boss 6 Tamil) அக்டோபர் 9 ஆம் தேதி, அதாவது அடுத்தவாரம் ஞாயிறு மாலை 6 மணி முதல் ஒளிப்பரப்பப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


 


 






முந்தைய சீசனில் விக்ரம் பட வேலைகள் காரணமாக பாதியில் கமல்ஹாசன் சென்றதால், அவருக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனால் இந்த சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இந்த சீசனை கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார் என்பது பிக்பாஸ் பிரோமோவின் மூலம் உறுதியானது. 


பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த சீசனில் பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விளம்பரம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து விரைவில் பிக்பாஸ் சீசன் 6 வரும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், கமல் நடிப்பில் வெளியான ப்ரொமோ ஒன்று வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிரோமோக்கள் வெளியிடப்பட்டன. 


 






இந்த சீசனிலும் ரூட்டை மாற்றி களேபரம் செய்ய திட்டமிட்டும் இருக்கும் விஜய் டிவி வீட்டுக்குள்ளே போகும் போட்டியாளர்களையும் கண்கொத்தி பாம்பாக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அந்தத்தகவல்களின் படி, இந்த சீசனில் விஜயி டிவி தொகுப்பாளர் ரக்சன், சுசித்ராவின் முன்னள் கணவர் கார்த்திக்குமார், சூப்பர் சிங்கர் ராக லெட்சுமி, இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா, தொகுப்பாளினி டிடி, பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சீரியல் நடிகை ஸ்ரீநதி, குக் வித் கோமாளி தர்ஷா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது..