Bigg Boss Season 6: உலகின் மிகவும் அதிகமாக கவனிக்கப்படக்கூடிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் தமிழ் வெர்சன் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனுக்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் கமலஹாசன் தோன்றி நடித்துள்ளார். இதில் மிக விரைவில் நிகழ்ச்சி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.