செய்தியாளராக தன் வாழ்க்கையை துவங்கி பின் விசக கட்சியில் இணைந்த விக்ரமன், இந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக களமிறங்கினார். இதற்கு முன் முதல் சீசனில் வந்த காயத்ரி ரகுராமன், இந்நிகழ்ச்சிக்கு பின்னரே அரசியலில் இறங்கினார். ஆதலால், பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஒரு அரசியல்வாதி பங்கேற்பது இதுவே முதன்முறை.
விக்ரமன் எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியை கையாளப்போகிறார் என்ற குழப்பம் மக்களிடையே இருந்து வந்தது. ஆனால், மக்களின் குழப்பத்தை தீர்க்கும் வகையில் முதல் நாளில் இருந்தே, நேர்மை என்ற ஒரே கோட்டை மட்டுமே காயை நகர்த்தி வருகிறார் விக்ரமன்.
நேர்மையுடன் இவர் விளையாடி வருவதால், நான்காம் சீசனில் பங்கேற்ற ஆரியின் நியாபகம்தான் வருகிறது என பலரும் கூறி வருகின்றனர். இவர் இப்படி விளையாடுவதால் சிலர் விக்ரமனை “பூமர் விக்ரமன்” என்ற ஹேஷ்டாக் போட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இவரை, முழுக்க முழுக்க ஆரியுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால், அந்த சீசனில் பிக்பாஸ் வீடெங்கிலும் ஆரிக்கு எதிர்ப்பு மட்டும்தான் இருந்தது. ஆனால், விக்ரமனுக்கு பிக்பாஸ் வீட்டில் உள்ள சில போட்டியாளர்களின் ஆதரவு உள்ளது. உள்ளே எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதோ, வெளியே அவ்வளவு ஆதரவு விக்ரமனுக்கு உள்ளது.
முதல் நாளிலிருந்து டாஸ்க்காக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் மரியாதையுடன் நடத்துங்கள் என்பதை சொல்லி வரும் விக்ரமன், இன்றளவும் அவரின் மரியாதைக்கு ஏதாவது பங்கம் நேர்ந்தால் மட்டுமே மற்றவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.
மற்றபடி, வீண் சண்டைகளுக்கு அவர்கள் அழைத்தால் மட்டுமே விக்ரமனின் மறுமுகத்தை காணமுடியும்.
டாஸ்க்குகளை பொறுத்தவரை, அதனை நேர்த்தியுடனும் நியாத்துடனும் விளையாடி வருகிறார். ஒருமுறை, தனலட்சுமியின் பேச்சை கேட்டு, குயின்ஸிக்கு சப்போர்ட் செய்ய மறுத்தார்.அதற்காக, குயின்ஸியிடம் விக்ரமன் மன்னிப்பும் கேட்டார். கடந்து வந்த முதல் 50 நாட்கள் வரை, பெரிய ஆதரவை பெற்ற விக்ரமன், தொடர்ந்து இதையே கடைபிடித்துவந்தால் இவர் வெற்றியாளராக மாறுவதற்கு 99.9% வாய்ப்புள்ளது