பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இன்று வரை அஸிம் இடம்பெறாத ப்ரோமோக்களே இல்லை. கன்னா பின்னாவென்று கத்தி சண்டை போட்டு ஒரு நாளில் வெளியாகும் மூன்று ப்ரோமோவிலும் அசால்டாக ஆஜராகிவருகிறார் அஸிம்.
ஷோவின் துவக்கத்தில் அனைவரிடமும் சண்டை போட்டு வந்த அஸிம், இடையில் நடந்த கமலின் சனிக்கிழமை பஞ்சாயத்திற்கு பின், சைலண்டாக மாறி, மற்றவர்கள் போட்டு வரும் சண்டைகளையும் சமாதானம் செய்து தடுத்து வந்தார்.
பின்னர் அதனையடுத்த வாரத்தில், அவரை பற்றி பெரிதாக கண்டெண்ட் எதுவும் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில், “ அமைதியாக இருந்தால் காணாமல் போகிவிடுவேனோ என்ற பயம் உள்ளது. எனக்கு இந்த கேமை எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை” என்று கமலிடம் சொன்னார்.
அடுத்ததாக, வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல், பழைய நிலைக்கு திரும்பினார் அஸிம். இவரின் வினோத நடவடிக்கையால், ஆயிஷா மற்றும் மைனா நந்தினி ஆச்சரயப்பட்டு “ஒரு ஒரு வாரமும் ஒருவிதமாக மாறி வருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமைக்கு பின்னர் இவரின் நடவடிக்கை மாறி விடுகிறது. அது எப்படி ஒருவர் ஒருநாளிலேயே மாறி விடமுடியும்.” என்று இருவரும் பேசிக்கொண்டனர்.
அதிலிருந்து இன்று வரை ஒரே மாதிரியாகதான் இருக்கிறார். வழக்கமாக பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், அவருக்கான தனி ஸ்ட்ரேடஜி ஒன்றை பயன்படுத்துவார்கள். அந்த வகையில் அஸிம், கோபப்பட்டு கத்தி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாக மாறுவதையே ஸ்ட்ரேடஜியாக வைத்துள்ளார்.
ஒருபக்கம் பிக்பாஸ் ரசிகர்கள், “தயவு செய்து அஸிமிற்கு டைட்டிலை கொடுத்து விட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை இத்துடன் முடித்து கொள்ளுங்கள். அவர் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஓடாது” என்று சிலர் கூறி வருகின்றனர். மறுபக்கம், “ பயங்கரமான ஸ்ட்ரேடஜியுடன் விளையாடுகிறார் என்று அஸிம் நினைத்து வருகிறார். ஆனால், இப்படி விளையாடு க்ரிஞ் செய்வது அவருக்கு புரியவில்லை” என்ற எதிர்மறையான விமர்சனத்தையும் முன் வைக்கின்றனர்.
வெளியில் இவருக்கு பல எதிர்ப்புகள் இருந்தாலும், அஸிம் இல்லாமல் ப்ரோமோ இல்லை ப்ரோமோ இல்லாமல் அஸிம் இல்லை என்ற அளவுக்கு ஸ்ட்ராங்கான போட்டியாளராக வளர்ந்து நிற்கிறார் அஸிம். இப்படி பட்ட அஸிமை, கண்டெண்டிற்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி வரை தக்கவைத்து கொள்ளும். பின் இவர் டைட்டில் வின்னராக மாறுவது மக்களின் கையில்தான் உள்ளது. இடையில் ஒருமுறை, பணப்பெட்டி டாஸ்க்கில், குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் வெளியே அதை எடுத்து செல்வேன் என்று அஸிம் பேசியிருந்தார்.
வைல்ட் கார்ட் எண்ட்ரியில், மீண்டும் ஜி.பி முத்துவோ அல்லது வேறு ஸ்டராங்கான போட்டியாளர் இறக்கப்பட்டால் அவர்கள், அஸிமின் வெற்றிக்கு முட்டுக்கட்டாக அமைவர் என்பது குறிப்பிடத்தக்கது.