பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றவுள்ளது.


வாரத்தின் முதல் நாளான நேற்று வழக்கம்போல், எலிமினேஷன் நாமினிஸ்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், ரச்சித்தா, மைனா நந்தினி, விக்ரமன், ஷிவின், கதிரவன், அஸிம், தனலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


இதன் பின்னர், இன்று வந்த முதல் ப்ரோமோவில் இந்த வாரம் முழுவதும் விளையாடப்போகும் டாஸ்க் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பிக்பாஸ் வீடு, பள்ளிக்கூடமாகவும், பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் மாணவர்களாகவும் மாறி ஆசிரியர்களிடம் மழலை மொழி பேசி அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். அதில் ஆசிரியர்களாக மாறும் சிலர், மாணவர்களுக்கு பாடங்களை கற்றுக்கொடுத்து தேவையான அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும். 






இந்த டாஸ்க், பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களில் இடம்பெற்று வருகிறது. இதுவரை இந்த டாஸ்க்கால் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த பல கண்டெண்ட் சிக்கியுள்ளது. அந்தவகையில் இந்த சீசனிலும் பிக்பாஸ் ஆரம்ப பள்ளியிலிருந்து பல கண்டெண்ட் சிக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு ஏற்றவாரு, ஆசிரியராக மாறிய விக்ரமன், மியா மியா பூனைக்குட்டி என்று பாடும்போது, மழலை மாணவர்களாக மாறிய மற்ற போட்டியாளர்கள்,  “ஹே மியாவ் மியாவ்பூன அட மீசை இல்லா பூன” என்று விக்ரம் நடித்த கந்தசாமி படத்தில் வரும் பாடலை பாடி அனைவரையும் சிரிக்க வைத்தனர்.


எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் :


இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். ஏழாம் வாரத்தில் குயின்ஸி வெளியேற்றப்பட்டார். எட்டாம் வாரத்தில் டபுள் எவிக்‌ஷனில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறினர். கடந்த வாரத்தில் ஜனனி வெளியேறினார்.


எஞ்சிய போட்டியாளர்கள் :


இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 10 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது