Bigg Boss 6 Tamil : இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியாகப்போகும் அந்த சுமார் போட்டியாளர் யார்?

சுமாராக விளையாடும் ரச்சிதா அல்லது மைனா நந்தினி வெளியேற வாய்ப்புள்ளது என மக்கள் அவர்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்கள், வெளிப்படையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

கடந்த வாரத்தில், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா மற்றும் விக்ரமன் ஆகியோர் எவிக்‌ஷன் நாமினேஷனில் இருந்தனர். இதில் ஏடிகே வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், கடைசி நேர ட்விஸ்ட் ஆக ஜனனி வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியது. அந்த தகவலின் படி, ஜனனி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்தவாரத்தின் முதல் நாளான இன்று வழக்கம் போல், எலிமினிஷேன் நாமினீஸ்கள் வெளிப்படையாக அனைவரின் முன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நாமினேஷன் முறையில், ஒவ்வொரு போட்டியாளரும் அனைவரின் முன் வந்து, நாமினியின் பெயரை சொல்லி அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். பின், அவர்களின் முகத்தில் சிவப்பு நிற மார்க் ஒன்றை வரையவேண்டும்.

இன்று வந்த ப்ரோமோவில், இன்று நடக்க போகும் நாமினேஷன் பற்றி சில காட்சிகள் இடம்பெற்றது. அதில், 
மணிகண்டா ராஜேஷ், ஷிவினின் பெயரை கூறி, “நல்ல கேம் ஆடுகின்றனர் என்று நினைத்துக்கொள்கிறார். அது எனக்கு பிடிக்கவில்லை.” பின், நந்தினியும் அதே காரணத்தை கூறினார்.அதனையடுத்து, மூர்க்கதனமாக தனலட்சுமி நடந்துகொள்கிறார் என ஏடிகேவும் விக்ரமனும் கூறி தனத்தை நாமினேட் செய்தனர். வேண்டும் என்றே அனைத்தையும் செய்வது போல் உள்ளது என்று கூறிய ஷிவின், அஸிமை நாமினேட் செய்தார். இறுதியாக அமுதவாணன், நந்தினியின் பெயரை கூறுகிறார்.

இதில், சில குறிப்பிட்ட பெயர்கள் மட்டும் இடம்பெற்று இருந்தாலும், ரச்சித்தா, மைனா நந்தினி, விக்ரமன், ஷிவின், கதிரவன், அஸிம், தனலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்தில் சுமாராக விளையாடும் ரச்சிதா அல்லது நந்தினி வெளியேற வாய்ப்புள்ளது என மக்கள் அவர்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

எஞ்சிய போட்டியாளர்கள் :

இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 10 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Continues below advertisement
Sponsored Links by Taboola