இந்த வாரம் முழுவதும் விளையாடப்பட்டு வரும் பிக்பாஸ் நீதிமன்றம் டாஸ்க் இன்றுடன் நிறைவடைகிறது. இதில், இன்று வந்த இரண்டு ப்ரோமோக்களின் தொகுப்பை காணலாம்.


டாஸ்க்கின் விதிமுறைகள் :


ஒவ்வொருவராக பிக்பாஸ் கேமரா முன் சென்று, அவர்களின் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர் அவருக்கான வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும்.


ப்ரோமோக்களின் தொகுப்பு : 






நேற்று வந்த ப்ரோமோவில் அனைவரும் தனிநபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, கதிரவன் மட்டும் காஃபி குடிக்கும் கப், சாப்பிடும் தட்டு சுத்தம் செய்யாமல் இருக்கிறது என்ற பொது வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.


அந்த வழக்கில் அனைத்து போட்டியாளர்களும் ஆஜர்படுத்த படுகின்றனர். அப்போது பாத்திரம் கழுவும் அணியை சேர்ந்த தனலட்சுமி  “இதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என அதிருப்தியாக கூறினார். இதைத்தொடர்ந்து, இன்று வந்த ப்ரோமோவில், குயின்ஸி தலைமையிலான நீதிமன்ற அமர்வில் பொது நல வழக்கு விசாரிக்கப்படுகிறது. இந்த வீடியோவில், ஆயிஷா மற்றும் அசிம், இந்த வேலையை யாரும் சரியாக செய்வதில்லை என்று கூறினர். அத்துடன் நீதிபதியாக குயின்ஸி மீதும் சில குற்றங்கள் சாட்டப்பட்டது.






இரண்டாவது ப்ரோமோவிலும், இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடந்துள்ளது. இதைதவிர்த்து, இதுவரை இன்று வந்த ப்ரோமோக்களில், எந்தவொரு சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெறவில்லை.


எஞ்சிய போட்டியாளர்கள்:


இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த வாரத்தில் நிவாஷினி வெளியேறினார்.


இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 15  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.