பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ரச்சிதா மகாலட்சுமி கடந்தாண்டு செய்த செயல் மீண்டும் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. 


விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சீசன் ஆரம்பம் முதலே நல்ல விறுவிறுப்பாக சென்றது.






இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை மைனா நந்தினி உள்ளே வந்துள்ளார். 






தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் பிராஸசஸ் தொடங்கியுள்ளதால் ஒவ்வொருவரின் ரசிகர்களும் தங்களது பேவரைட் போட்டியாளர்கள் செய்த நெகிழ்ச்சியான பல செயல்கள், உதவிகளை மீண்டும் ட்ரெண்டாக்கி பார்வையாளர்களின் ஆதரவை பெறுகின்றனர். இதன்மூலம் போட்டியாளர்களை தக்க வைக்க அவர்களது ஆர்மி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி தொடரான ​​சரவணன் மீனாட்சியில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி கடந்தாண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


இதுதொடர்பான பேட்டி ஒன்றில்  திருநெல்வேலி அருகே உள்ள ஒரு ஊரில் உள்ள மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை என்னை சந்திக்க ஆசைப்பட்டார். நானும் போய் பார்த்தேன். அந்த தருணம் எனக்கு எமோஷனலா இருந்தது என குறிப்பிட்டுளார். இந்த வீடியோ இப்போது மீண்டும் ட்ரெண்டாகியுள்ளது.