பிக் பாஸ் 6 வது சீசனின், பத்தாவது நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது. இந்த ப்ரோமோவில், தனுஷின் மாரி படத்தின் பாடலுக்கு வெறித்தனமாக நடனம் ஆடியுள்ளார். வித விதமாக டாஸ்குகளை கொடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இம்முறை லக்சரி பட்ஜெட் டாஸ்க்கிற்கு “ டான்ஸ் மாரத்தான்”எனும் நடன டாஸ்க்கை கொடுத்துள்ளது. இதில், போட்டியாளர்களில் ஒருவர், மற்றொருவரை சவால் விட்டு நடனம் ஆட அழைக்கவேண்டும். பாட்டுக்கு, சவால் விட்டவர் மற்றும் சவாலை ஏற்றவர் ஆகிய இருவரும் சேர்ந்து நடனம் ஆட வேண்டும். யார் சிறப்பாக நடனம் ஆடுகிறார்களோ அவர்களே சிறந்த போட்டியாளராக அறிவிக்கப்படுவர். போட்டியில் வெற்றி பெற்ற நபருக்கு 400 புள்ளிகள் கொடுக்கப்படும். மைனா நந்தினி இப்போது வீட்டிற்குள் நுழைந்ததால், அவருக்கு மட்டும் 200 புள்ளிகள் முன்பாகவே கொடுக்கப்பட்டது.
நேற்று துவங்கிய இந்த டாஸ்க்கில் பாதி போட்டியாளர்கள் மட்டுமே பங்குபெற்றனர். இதற்கு இடையே கதை சொல்லும் டாஸ்க்கும் நடைபெற்றது. இதனால், டான்ஸ் போட்டியில் பங்குகொள்ளாத போட்டியாளர்கள் இன்று பங்குபெற்று நடனமாடியுள்ளனர். இந்த டாஸ்க்கில், வி ஜே கதிரவனும், விக்ரமனும் சேர்ந்து வெறித்தனமாக டான்ஸ் ஆடுகின்றனர். அவர்கள் அந்த டாஸ்க்கை முடித்தவுடன், மற்ற போட்டியாளர்கள் அவர்களை பாராட்டுகின்றனர். பின்னர் பிக் பாஸ், விக்ரமனை பார்த்து வாழ்த்துக்கள் விக்ரமன் என கூறி அவரை வெற்றியாளராக அறிவிக்கிறார்.
பிக் பாஸ் போட்டியாளர்கள் :
இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் படிக்க : Watch Video: ‛வயது என்னை மாற்றுவதா... வயதை நான் மாற்றுகிறேன்..” வொர்க்-கவுட் வீடியோவை வெளியிட்ட ஜோ!