பிக்பாஸ்  நிகழ்ச்சியின் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் கதை சொல்லும் நேரம் டாஸ்க் தொடர்ந்த பின் ஷிவின் கணேசன் தன் கதையை விவரிக்க துவங்கினார். விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சீசன் ஆரம்பம் முதலே, நல்ல விறுவிறுப்பாக தொடங்கியது.




இந்த வார டாஸ்க் ஆக  “கதை சொல்லும் நேரம்”  கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வரிசை எண் படி கதை சொல்லலாம் என்றும், லிவிங் ஏரியாவில் 3 பஸ்சர்கள் வைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டியாளர்கள் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது கேட்டுக் கொண்டிருக்கும் சக போட்டியாளர்கள் 60 நொடிகளுக்குள் 3 பஸ்சர்களை அழுத்தினால் கதை நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம். அப்படி ஒன்று அல்லது 2 பஸ்சர்கள் மட்டும் அடிக்கப்பட்டால் தொடர்ந்து அவர்கள் கதை சொல்லலாம் என்று முதல் ப்ரோமோ பார்க்கும் போது புரிந்தது.






சற்று நேரத்திற்கு முன் வெளியாகிய, இரண்டாவது ப்ரோமோவில் ஷிவின் கணேசன் மனம் உருகி பேசியுள்ளார். ப்ரோமோவில் பேச துவங்கிய அவர், “ எங்க அம்மா எனக்கு வேலையே கிடைக்காது, எங்காயவது பிச்சை எடுக்கனும் என்ற பயத்தில் என்னை சிங்கபூருக்கு அனுப்பினார். நானும் எந்த தப்பும் பண்ணவில்லை, என் அம்மாவும் எந்த தப்பும் பண்ணவில்லை. என் அம்மா என்னிடம் பேச மாட்டேன் என்று சொல்லிடாங்க. பாசம் இல்லாமல், படிப்பு இல்லாமல் இன்னும் தவிச்சிட்டு இருப்பவர்களின் நிலைமை மாறனும். என் போல் இருக்கும் நபர்களின் கதைகள் இந்த சமூகத்தில் கேட்கப்பட வேண்டும் என்று நான் நினைத்து எடுத்த இந்த முடிவுதான் பிக்பாஸ்.” என்று வருத்தமாக கூறினார்.




இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை மைனா நந்தினி உள்ளே வந்துள்ளார்