பிக் பாஸ் சீசன் 6-ன் எட்டாவது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகிவுள்ள நிலையில், தற்போது இந்த சீசனுக்கான முதல் வார கேப்டன்சி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.


இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 






பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட குறிப்பை, போட்டியாளர் அசீம் அனைவரின் முன் வாசிக்கிறார். அதில்,  “இது பிக்பாஸ் சீசனின் முதல் கேப்டன்சி டாஸ்க். மூன்று கடிகாரங்கள் கைப்புடி உடன் இருக்கும்.  இறுதிவரை, எந்த போட்டியாளர் கீழே விழாமலோ, இறங்காமலோ இருக்கிறாரோ அவரே பிக் பாஸ் சீசன் 6-ன் முதல் கேப்டன்.” என்று குறிப்பிட்டு இருந்தது.


இந்த கேப்டன்சி டாஸ்கில், சாந்தி, ஜனனி, ஜி.பி.முத்து ஆகியோர் பங்கேற்கின்றனர். அதில், முதலில் சாந்தி கீழே இறங்கிவிடுகிறார். மீதம் இருக்கும் ஜனனி பாட்டு பாடி எப்படியோ சமாளிக்கிறார். ஒரு மணி நேரம் அப்படியே இருந்ததனால், ஜனனியும் தடுமாற, இறுதியில் ஜி.பி.முத்து போட்டியினை வெல்கிறார். இந்த டாஸ்க்கில் பங்குபெறுவதற்கு முன், ஜி.பி முத்துவிற்கு காய்ச்சல் இருந்ததுள்ளது. அதனால் அவருக்கு, டிப்ஸ் ஏற்றியுள்ளனர். இருப்பினும் இந்த டாஸ்க்கில் அவரின் விடாமுயற்சினால் பங்குபெற்று வெற்றி பெற்றுள்ளார்.


போட்டியாளர் ஆனதும், மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து இவரை நச்சரிக்க தொடங்கிவிடுகின்றனர். கேப்டன் ஆன பிறகு ஜி.பி முத்து என்ன செய்கிறார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காணலாம்.