Bigg Boss 6 Tamil: அஸிம் vs ராபர்ட் மாஸ்டர்...கொளுத்திப் போட்ட கமல்ஹாசன்... பஞ்சாயத்து இருக்கு...!

முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் அஸிம் சொல்லி ரச்சிதா பொம்மையை ஆயிஷா வேண்டுமென்றே உள்ளே வைக்காமல் இருந்தாக கூறி மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் காட்சிகள் இடம் பெற்றது.

Continues below advertisement

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று நடக்கும் நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் ராபர்ட் மாஸ்டர் - அஸிம் இடையே சூடான விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர். 

இதில் ஜி.பி.முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற, முதல் எவிக்‌ஷனாக சாந்தி வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2வது எவிக்‌ஷனாக  சக பெண் போட்டியாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட அசல் கோலார் வெளியேறியுள்ளார். இதனிடையே நேற்றைய எபிசோடில் கமல் கடந்த வாரம் முழுவதும் விளையாடப்பட்ட, நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் பற்றி பேசினார். 

மேலும் சக போட்டியாளர்களை கிண்டல் செய்தது, ஆக்ரோஷத்துடன் கத்தியது என அஸிமின் நடவடிக்கைகளை கமல் கடுமையாக கண்டித்தார்.முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் அஸிம் சொல்லி ரச்சிதா பொம்மையை ஆயிஷா வேண்டுமென்றே உள்ளே வைக்காமல் இருந்தாக கூறி மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் காட்சிகள் இடம் பெற்றது. இந்நிலையில் தற்போது 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் தனக்கென சொந்தமாக ஒரு யோசனை இல்லை என நினைக்கும் ஒரு ஆள் யார் என்பதை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கிறார். இதில் அஸிம் ராபர்ட் மாஸ்டரை தேர்வு செய்து அவர் லைட்டா இருக்குது. சுவிட்ச் வந்து அமுதவாணனிடம் இருக்கிறது என தெரிவிக்கிறார். உடனே அமுதவாணன் எழுந்து அஸிம் சொல்லணும்ன்னு சொல்றாருன்னு நான் நினைக்கிறேன். அதுல லாஜிக்கே இல்ல என குற்றச்சாட்டை மறுக்கிறார். 

இதற்கு ராபர்ட் மாஸ்டர் எல்லோரும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். முக்கியமா நான் அஸிம் கிட்ட அவ்வளவா பேசிக்கிறது இல்ல. ஏனென்றால் அந்த துப்பாக்கி என்மேல திரும்புச்சின்னா நமக்கு தான் அசிங்கம். அதனால எனக்கு பயமா இருந்துச்சி. அவரை பார்த்தா ஹாய் டார்லிங்..எப்படி இருக்கீங்க...சாப்டீங்களா என கேட்பேன். மத்தபடி எல்லோருடனும் பேசிகிட்டு தான் இருக்கேன் என தெரிவிக்கிறார். 

Continues below advertisement