பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில் வரும் காட்சிகள் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது.இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
எப்போதும் முதல் வாரம் அடக்கி வாசிக்கும் போட்டியாளர்கள் இந்த சீசனில் முதலிலேயே எகிற ஆரம்பித்ததால் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக அமைந்தது. பஞ்சாயத்துகளும் நடந்ததால் வார இறுதியில் வரும் கமல் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பெரிதாக எந்த கறாரும் காட்டாமல் ஜாலியாகவே கொண்டு சென்றார்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் ஜிபி முத்துவை கமல் கலாய்க்கும் காட்சிகள் இடம் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல்ஹாசன், இப்படி ஒரு நபர் இந்த ஷோவில் இல்லாமலே இருந்திருக்கலாம் என யாரை நினைக்கிறீர்கள் என கேட்கிறார். அதற்கு அமுதவாணன் ஒரு விஷயம் கரெக்ட்ன்னு தெரிஞ்சா கூட திரும்ப அதைப் பத்தியே பேசுவாரு என சொல்லி விக்ரமனை தேர்வு செய்கிறார். இதேபோல் ரக்ஷிதா எல்லாருடனும் நேரம் ஒதுக்கியிருந்தா இன்னும் நல்லா புரிஞ்சிக்கலாம் என சொல்லி தனலட்சுமியை தேர்வு செய்கிறார்.
உடனே கமல் இல்லாமலே இருந்தா நல்லாருக்கும்ன்னு சொல்றதுக்கு பதிலா இருந்தா நல்லாருக்கும்ன்னு சொல்றீங்களா என நக்கலாக கேட்கிறார். இதேபோல் ஜனனியும் தனலட்சுமியை தேர்வு செய்து தான் மட்டுமே இருக்கணும் என்ற நினைப்பில் தன்னை மட்டுமே என்ஜாய்மெண்டா வச்சிருக்காங்க. மற்றவர்களோட தொடர்ப வச்சிருக்க விரும்ப மாட்டுகாங்க என காரணம் சொல்வது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.