துணிவு படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், நடிகர் அஜித் சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் அஜித்தை சுற்றி வளைத்த ரசிகர்கள் பலர், அவருடன் போட்டோ எடுக்க முயன்றனர். இதையடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராக இருக்கும் ஏ.கே 62 படத்தின் படப்பிடிப்பில் அஜித்குமார் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
அதற்கு பின், 7 கண்டங்களில் உள்ள 62 நாடுகளுக்கு பைக்கில் பயணம் செல்லவுள்ளார். அவருடன் மொத்தம் 3 மூன்று சக பைக் ஓட்டுனர்கள் பயணிக்கவுள்ளனர். ஏ.கே 61 படத்தின் ஷுட்டிங், அடுத்த ஆண்டின் பாதியில் முடிந்துவிடுவதாகவும் அதற்கு பின், இந்த உலக பயணத்தை மேற்கொள்வதாக தகவல் வந்துள்ளது. உலகத்தையே சுற்ற போவதால், இந்த வெர்ல்ட் டூருக்கு மொத்தம் 18 மாத காலங்களுக்கு திட்டமிட்டுள்ளனர். அதனால் அந்த 18 மாதங்களும், அதாவது கிட்டதட்ட ஒன்று அரை வருடங்களுக்கு எந்தவொரு படமும் நடிக்கபோவதில்லை என்று சொல்லப்படுகிறது.
அடுத்து நடிக்க போகும், ஏ.கே 62 படத்திற்கான லுக்கை நடிகர் அஜித் மாற்றவுள்ளார் என்றும் இணையத்தில் பல தகவல்கள் பரவி வருகிறது. இதற்கு முன்பாக, நடிகர் அஜித் தாய்லாந்து நாட்டில் பைக் ட்ரிப்பில் ஈடுப்பட்டிருந்தார். பைக்குடன் ரேசிங் ஆடை அணிந்த அஜித்தின் பல புகைப்படங்கள் லீக் ஆனது. இணையத்தில் வெளிவந்த அந்த புகைப்படங்களில், நடிகர் அஜித் பார்பதற்கு ஜம்முன்னு இருந்தார். அந்த போட்டோக்கள் அனைத்தும் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வந்தது.
துணிவு படமானது வரும் பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று படக்குழு கூறியிருந்தனர். துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டரும் வெளியாகி அனைவரது வரவேற்பையும் பெற்றது.
மேலும் நடிக்க : Rishab Shetty: காந்தாரா கதாநாயகன்... யார் இந்த ரிஷப் ஷெட்டி? வேலை செய்ததா பெயர் மாற்றம்?