விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல். தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
வழக்கமாக, லக்சரி பட்ஜெட் டாஸ்க்கை குழுவாக சேர்ந்து விளையாடுவர். ஆனால், இம்முறை இந்த லக்சரி பட்ஜெட்கான டாஸ்குகளை தனிநபராக விளையாட வேண்டும் என்ற புது விதிமுறை உண்டாகியுள்ளது.
அப்படியாக, இந்த டாஸ்கில், பிக் பாஸ் வீட்டில் திடீர் சத்தம் ஒன்று எழுப்பப்படும். அந்த சத்தமானது ஓயாமல் ஒலித்து கொண்டே இருக்கும். அதை நிறுத்த வீட்டின் ஏதோ ஒரு இடத்தில் பஸ்சர் ஒன்று இருக்கும். அதை அழுத்தினால் சத்தம் நின்று விடும். எந்த போட்டியாளர் முதலில் சென்று அந்த பஸ்சரை அழுத்தி சத்தத்தை நிறுத்துகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். சத்தம் ஒலிக்கும் வரை, மேல் கூரையிலிருந்து குப்பை கொட்டி கொண்டிருக்கும். அதையும் பிக் பாஸ் போட்டியாளர்கள் சுத்தம் செய்ய வேண்டும். குப்பையை அகற்றி வீட்டை சுத்தம் செய்வதும் ஒரு டாஸ்காகும்.
மேலும் படிக்க : Friday Movie Releases: வாங்குற சம்பளம் சினிமாவுக்கே போயிரும் போலயே ..இன்னைக்கு மட்டும் 61 படம் ரிலீஸ்..!