இந்திய திரையுலகில் ஒரே நாளில் 61 திரைப்படங்கள் தியேட்டர் வாயிலாக வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். 


பொதுவாகவே பொதுமக்களின் மிகப்பெரிய பொழுதுப் போக்குகளில் ஒன்று சினிமா. வாரா வாரம் தியேட்டரில் என்ன படம் ரிலீசாகிறது என காத்துக்கிடந்த காலம் போய், தியேட்டரில் ரிலீசான அந்த படம் எப்ப ஓடிடி தளத்துல வரும் என்ற அளவுக்கு இரண்டு தளங்களும் செம பிசியாக தங்களுக்கான ரசிகர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றால் அடியோடு முடங்கிய திரையுலகம் தற்போது மீண்டும் முழு வீச்சில் அனைத்து மொழிகளிலும் மீண்டு வந்துள்ளது. 


தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி 50 வருட கனவான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீசானது. வசூலில் 400 கோடியை தாண்டியுள்ள இப்படத்தால் அக்டோபர் 7 ஆம் தேதி ரிலீசாக வேண்டிய பெரும்பாலான படங்கள் வெளியாகும் தேதியை நவம்பர் 4 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. இதேபோல் தீபாவளி வரும் 24 ஆம் தேதி வரவுள்ளதால் அதனை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி “சர்தார்”, “பிரின்ஸ்” ஆகிய படங்கள் வெளியாகிறது. 


இதனால் இடைப்பட்ட அக்டோபர் 14 ஆம் தேதி பெரிய படங்கள் ரிலீசாகாது என நினைத்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக அனைத்து மொழிகளையும் சேர்த்து 60 படங்கள் ஒரே நாளில் ரிலீசாகியுள்ளது. இதனால் தியேட்டர், ஓடிடி தளங்கள் களைக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இன்றைய தினம் தியேட்டரில் மொழி வாரியாக வெளியான படங்களின் விவரம்: 


தமிழ்



  • Repeat ஷூ

  • ஆற்றல் 

  • சஞ்சீவன் 

  • முகமறியான் 

  • காதலிச்சா தப்பா

  • சிபிஐ 5 (தமிழ் டப்)

  • காட்ஃபாதர் (தமிழ் டப்)


ஆங்கிலம் 



மலையாளம் 



  • விசித்திரம் (Vichithram)

  • வரால் (Varaal)

  • சுபதினம் (Shubhadinam)

  •  ஒரு பக்கநடன் பிரேமம் (OruPakkaNadanPremam)

  • மை நேம் இஸ் அழகன் (My Name Is Azhakan )

  • பிகே ரோசி (PK Rosy)


இந்தி 



  • Doctor G

  • Code Name Tiranga

  • Kantara (இந்தி டப்)

  • Aye Zindagi 

  • Kahani Rubber BandKi

  • ModiJi Ki Beti 

  • Jaggu Ki Lalten

  • Love You Loktantra

  • Midday Meeal

  • Raaz DarrKa 


தெலுங்கு 



  • Boy friend For Hire

  • Neetho 

  • Crazy Fellow 

  • Ra Raju

  • Na Ventapaduthunna Chinna devadamma

  • Ninne Pelladatha

  • Rudranetri

  • Geetha


கன்னடம் 



  • Champion 

  • MRP

  • 3.0

  • Shubhamangala

  • Nan Khadar Nan Hudgi Super

  • Sindhoora 


மராத்தி 



  • Hari Om 

  • ti mazi premkatha

  • tu fakt ho mhan

  • Waghar 

  •  Dhaska

  • KataKirr 

  • Brahmand Nayak Ohm Soham Gunvanta 


குஜராத்தி 



  • Madhav

  • GJ To NJ 

  • Pran Chhute Pan Mari Preet Na Tute


பஞ்சாபி 



  • Vich Bolunga Tere


ஹரியான்வி



  • DJ Wale Babu


போஜ்பூரி 



  • Dharma


பெங்காலி 



  • BijoyaDashami


ஒடியா 



  • Oye Anjali

  • Trushna

  • Premare Risk Hela MateIshq


அஸ்ஸாமி 



  • Ghost Of Maaikhuli

  • MurXekh Gaan


மணிப்பூரி 



  • Lairembi 


நேபாளி 



  • Maan Sanga Maan


குஜராத்தி 



  • Chhello Show