பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் அஸீம் தமிழர்கள் குறித்து சொன்ன கருத்துக்கு கமல் பதில் தெரிவித்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ்  என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான். 


முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன் போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, ரியோ, ரம்யா பாண்டியன், நிரூப், பிரியங்கா உள்ளிட்ட பலரும் ஆட்டம் ஆடி வரவேற்றனர். இவர்களை தொடர்ந்து வந்த கமல், ”வேட்டைக்கு தயாரா” என்ற முழக்கத்துடன் வீட்டின் உள்ளே சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த இடங்களை சுற்றிக் காட்டினார். 






இதில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போது தனிமைப்படுத்துதல் வரை சென்று விட்டு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் வந்த சீரியல் நடிகர் முகம்மது அஸீம் 4வது போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அவர் மேடையில் வந்த போது தமிழர்கள் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்தார். அதில் வெளிநாட்டில் பிறந்தாலும் தமிழன் தமிழன் தான்.. இங்கே அயல்நாட்டுக்காரன் பிறந்தாலும் அயல்நாட்டுக்காரன்தான் என கூற கமல்ஹாசன் அதனை மறுத்து பதில் கருத்து தெரிவித்தார். 


அவர் இங்கே அயல்நாட்டுக்காரன் பிறந்தாலும் அயல்நாட்டுக்காரன் என்று சொல்கிறீர்களா.. சின்ன திருத்தம் தமிழ் உணர்வு யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் எல்லோருமே தமிழர்கள்தான் என பதிலடி கொடுத்துள்ளார்.