பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் மற்றவர்களின் கருத்துகளை சொல்ல விடாமல் இடையூறு செய்த விக்ரமன், ரச்சிதாவை கமல்ஹாசன் கண்டிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Continues below advertisement


டபுள் எவிக்‌ஷன்:


ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் ரொம்ப மொக்கையாக சென்று கொண்டிருக்கிறது. டாஸ்கிலும் சரி, வீட்டில் பிற விஷயங்களிலும் சரி போட்டியாளர்கள் ஆர்வம் காட்டாமல் எனக்கென்று இருக்கிறார்கள்.






ஆனால் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஓரளவு நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகியது என்றே சொல்லலாம்.  தமிழ் சினிமாவின் பிரபல கேரக்டர்களாக போட்டியாளர்கள் மாறிக்கொண்டு ஆட்டம், பாட்டம் என பிக்பாஸ் வீடே களைக்கட்டியது. இதனிடையே கடந்த வாரம் எலிமினேஷனில் குயின்ஸி வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என முன்னதாக கமல் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்றைய முதல் எவிக்‌ஷனில் ராம் வெளியேற்றப்பட்ட காட்சிகள் இடம் பெற்றது. 






ரக்சிதா, விக்ரமன்:


இதற்கிடையில் கமல்ஹாசன் நேற்று போட்டியாளர்களிடம் 60 நாட்கள் ஆகியும் தன் அசல் முகத்தை காட்டவே காட்டாத கபடநாடக வேடதாரி யார் என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு ரச்சிதா,மைனா, விக்ரமன் பெயர்களை சக போட்டியாளர்கள் சொல்ல, விக்ரமனும் ரச்சிதாவும் அவர்களிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்கள்.





இதனைக் கண்டு டென்ஷனான கமல், குறுக்க குறுக்க பேசி மத்தவங்க கருத்தை சோல்ல விடாம தடுக்காதீங்க என தெரிவித்தார். அதற்கு விக்ரமன் நான் யாரை அண்ணா பேச விடல என பதில் கேள்வியும் எழுப்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.