பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கமல் கேட்ட கேள்விக்கு போட்டியாளர்களில் பலர் ரச்சிதா, விக்ரமன் பெயர்களை சொன்னதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் ரொம்ப மொக்கையாக சென்று கொண்டிருக்கிறது. இதனை வாரா வாரம் கமல் சுட்டிக்காட்டினாலும் டாஸ்கிலும் சரி, வீட்டில் பிற விஷயங்களிலும் சரி போட்டியாளர்கள் ஆர்வம் காட்டாமல் எனக்கென்று இருக்கிறார்கள்.


ஆனால் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஓரளவு நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகியது என்றே சொல்லலாம். அதன்படி ரசிகர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட தமிழ் சினிமாவின் பிரபல கேரக்டர்களாக போட்டியாளர்கள் மாறிக்கொண்டு வாரம் முழுக்க இதே கெட்டப்பில் இருந்து கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டு பிற போட்டியாளர்களிடம் இருந்து சன்மானம் பெற வேண்டும். இதில் அனைவரும் போட்ட கெட்டப்புகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 






இதனிடையே கடந்த வாரம் எலிமினேஷனில் குயின்ஸி வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என முன்னதாக கமல் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியானது. இதில் எத்தனை வேஷம் போட்டாலும் உண்மை முகம் தெரிய தான் செய்கிறது. இன்னும் ஒவ்வொருவரையும் சார்ந்து இருப்பது தொடரத்தான் செய்கிறது என ஆரம்பமே போட்டியாளர்களுக்கு கமல் குட்டு வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 


இதனைத் தொடர்ந்து 60 நாட்கள் ஆகியும் தன் அசல் முகத்தை காட்டவே காட்டாத கபடநாடக வேடதாரி யார் என்ற கேள்வியை கமல் எழுப்ப, பலரும் ரச்சிதா, விக்ரமன் பெயர்களை தெரிவிக்கிறார்கள். இப்படியான சுவாரஸ்யமான காட்சிகளுடன் இன்றைய எபிசோட் ஒளிபரப்பாகவுள்ளது.