Bigg Boss 6 Tamil: 'உங்ககூட வாதாட எனக்கு பொறுமை இல்ல’ ... அஸிமிடம் கோபத்தை காட்டிய கமல்ஹாசன்..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோடின் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், அதில் அஸிமை, நிகழ்ச்சியின் தொகுப்பாளர்  கமல்ஹாசன் விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

Continues below advertisement

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோடின் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், அதில் அஸிமை, நிகழ்ச்சியின் தொகுப்பாளர்  கமல்ஹாசன் விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

Continues below advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில், தற்போது 75 நாட்களை கடந்துள்ளது. தொடர்ந்து 6வது சீசனாக இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சுமாராகவே சென்று வருகிறது. வலுவான போட்டியாளர்களாக இருந்தும் ஒரு பிரச்சினையில் ஆரோக்கியமான வாக்குவாதம் செய்யாமல் அடிதடி சண்டைக்கு செல்லும் அளவுக்கு பார்வையாளர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விடுகின்றனர். 

கடந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜனனி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வார நாமினேஷன் பிராசஸில் ரச்சிதா, மைனா நந்தினி, விக்ரமன், ஷிவின், கதிரவன், அஸிம், தனலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தனலட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இன்றைய தினத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கடந்த வாரம் பள்ளி, கல்லூரி டாஸ்க்குகள் அரங்கேறியது. வழக்கம்போல பெர்பார்மன்ஸ் அடிப்படையில் தங்களை 1 முதல் 10 வரை வரிசைப்படுத்தும் ரேங்கிங் முறையில் கடும் சண்டை நடந்தது. 

இதில் விக்ரமன் பேசியதை கட்டப்பஞ்சாயத்து பண்றீங்களா என அஸிம் கேட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இது கமல்ஹாசன் பேசும் போதும் எதிரொலித்தது. இன்றைய ப்ரோமோவில், கட்டப்பஞ்சாயத்து சொன்னதன் புரிதல் என்ன, உதாரணம் எடுத்து சொல்வது எப்படி அவமரியாதையாகும்?..நான் கண்டிக்கிறேன். அவ்வளவுதான். உங்களோட விவாதம் பண்ண எனக்கு பொறுமை இல்லை. ஒருத்தரை அவமரியாதை பண்றதுக்கு முன்னால், இப்படி ஒரு அவமரியாதை நம்மளை நோக்கி வச்சிட்டா என பண்ண யோசிக்கவே மாட்டுக்குறீங்க. மத்தவங்க அவமானப்படும் நிலையில், நீங்க அப்படி தட்டி விட்டுட்டு போய்டுறீங்க..ரௌத்திரம் பழகணுமே தவிர அன்றாட பயிற்சியாக வச்சிருக்கக்கூடாது என கமல் அந்த ப்ரோமோவில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement