பிக்பாஸ் சீசன் ஆரம்பித்து 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று வெளியான மூன்று ப்ரோமோக்களின் தொகுப்பை இங்கு காணலாம்.


கடந்த வாரத்தில் குறைந்த ஓட்டிகளை பெற்று ராபர்ட் மாஸ்டர், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இன்று வந்த முதல் ப்ரோமோவில், இந்த வாரத்தின் எலிமினேஷன் நாமினீஸ்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


எப்போதும், கன்ஃபெஷன் அறையில் நடத்தப்படும் இந்த எவிஷ்கனுக்கான நாமினேஷன், ஒரு முறை ஓபன் நாமினேஷன் என்ற பெயரில் அனைவரும் முன் நடத்தப்பட்டது. இப்போது, சற்று வித்தியாசமான முறையில் ஓப்பன் நாமினேஷன் டாஸ்க் நடைபெற்றுள்ளது.ஒரு போட்டியாளர், இரு நபர்களை நாமினேட் செய்யலாம். அந்தவகையில், நாமினேட் செய்யப்படுபவரின் பெயர்களை அழைத்து, காரணத்தை சொல்லி க்ரீமினை அவர்களின் முகத்தில் தடவ வேண்டும்.






இன்று வந்த முதல் ப்ரோமோவில், நாமினேஷன் செய்யப்படும் காட்சிகள் இடம்பெற்றது. இரண்டாவது ப்ரோமோவில் ஏடிகே, தனலட்சுமியின் பெயரை கூறி அவரை நாமினேட் செய்வதற்கான காரணத்தை கூறும்போது, தன ம் இடையில் பேசினார். உடனே, ஏடிகே இதற்காகத்தான் உன்னை நாமினேட் செய்கிறேன் என்று சொன்னார். 






மூன்றாவது ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான டாஸ்க் பற்றி விளக்கம் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.பழங்குடியினரும்- ஏலியன்களும் என்பது டாஸ்க்கின் பெயராகும். பழங்குடியினர் அவர்களின் இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் உள்ள அதிசய கற்களுக்காக ஏலியன்கள், அவர்களின் இடத்தை ஆக்கிரமித்துவிட்டனர். இரு அணிக்கு தேவைப்படும் வளத்தை பெறுவதற்கான போராட்டமே இந்த டாஸ்க்.






இந்த டாஸ்க்கிற்காக, பிக்பாஸ் போட்டியாளர்களை இரு அணிகளாக பிரிக்கப்படுவர். பின், இந்த டாஸ்க் வாரம் முழுவதும் விளையாடப்படும். ஸ்வீட் ஸ்டால் டாஸ்க்கில் நடந்த தில்லு முல்லு இந்த டாஸ்க்கிலும் நடந்தால், பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகும்.


எஞ்சிய போட்டியாளர்கள்:




இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேறினார்.கடந்த வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார்.


இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 15  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.