Bigg Boss 6 Tamil: ‛வா தலைவா... வா தலைவா...’ டூ டுட்டு டுட்டு டூ… ரச்சித்தாவுடன் நடனமாடிய ஜிபி!

Bigg Boss 6 Tamil :பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான ரச்சித்தா மற்றும் ஜனனி, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் வரும் நயன் தாரா மற்றும் சமந்தா போல் அழகாக உடை அணிந்து, டு டு டு பாடலுக்கு ஆடிக்கொண்டு இருந்தனர்.

Continues below advertisement

டான்ஸ் மாரத்தான் போட்டியில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் வரும் டு டு டு பாட்டிற்கு ரச்சித்தா மற்றும் ஜனனியுடன் ஜிபி முத்து நடனமாடியுள்ளார்.பிக் பாஸ் ஆறாவது சீசனில் நடந்த டான்ஸ் மாரத்தான் நடைப்பெற்றது.  இதில், போட்டியாளர்களில் ஒருவர், மற்றொருவரை சவால் விட்டு நடனம் ஆட அழைக்கவேண்டும். பாட்டுக்கு, சவால் விட்டவர் மற்றும் சவாலை ஏற்றவர் ஆகிய இருவரும் சேர்ந்து நடனம் ஆட வேண்டும். யார் சிறப்பாக நடனம் ஆடுகிறார்களோ அவர்களே சிறந்த போட்டியாளராக அறிவிக்கப்படுவர். போட்டியில் வெற்றி பெற்ற நபருக்கு 400 புள்ளிகள் கொடுக்கப்படும். மைனா நந்தினி இப்போது வீட்டிற்குள் நுழைந்ததால், அவருக்கு மட்டும் 200 புள்ளிகள் முன்பாகவே கொடுக்கப்பட்டது.

Continues below advertisement

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான ரச்சித்தா மற்றும் ஜனனி, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் வரும் நயன் தாரா மற்றும் சமந்தா போல் அழகாக உடை அணிந்து, டு டு டு பாடலுக்கு ஆடிக்கொண்டு இருந்தனர். ஸ்கோர் செய்ய நினைத்த ரச்சித்தா, சிவனே என்று கிடந்த ஜி.பி முத்துவின் கைகளை பிடித்து இழுத்து வந்து விஜய் சேதுபதி போல் ஆடவிட்டார். முதலில் திரு திருவென்று முழித்து கொண்டிருந்த டிக்டாக் நாயகன், கொஞ்சம் நேரத்திற்கு பின், சூப்பராக நடனமாட தொடங்கிவிட்டார். இந்த போட்டியில், ரச்சித்த வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ரச்சித்த, ஜி.பி முத்துவை வைத்து கண்டெண்ட் ஆக்கலாம் என்று நினைத்து அழைத்து வந்தர். ஆனால், சந்தடி சாக்கில் சைக்கிள் கேப்பில், முத்து ஸ்கோர் செய்துவிட்டார்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் : 

இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil: ‘என்ன பார்த்தா இளக்காரமா இருக்கா?’ ... ஜிபி முத்துவிடம் எகிறிய விக்ரமன்..நடந்தது என்ன?

Continues below advertisement