Bigg Boss 6 Tamil: ‘என்ன பார்த்தா இளக்காரமா இருக்கா?’ ... ஜிபி முத்துவிடம் எகிறிய விக்ரமன்..நடந்தது என்ன?
குறுக்கே வரும் விக்ரமன் தனத்திடம் என்னவென்று விசாரிக்க அவர் அசல் செய்ததை சொல்கிறார். அப்போது அஸீம் தனம் வா நாம போகலாம் என கூப்பிட, நீ இருப்பா அவங்க பேசட்டும் என விக்ரமன் தெரிவிக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் விக்ரமனுக்கும் ஜிபி முத்துவுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்படும் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியள்ளது. ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.
Just In




இதனிடையே இன்றைய தினம் வெளியான முந்தைய ப்ரோமோவில் தனலட்சுமிக்கும் அசல் கோலாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறும் காட்சிகள் இடம் பெற்றது. தன்னை பெரியம்மா, ஆன்ட்டி என பாடி ஷேமிங் பண்ணுவதாக அசல் மீது சரமாரியாக குற்றம் சாட்டினார் தனலட்சுமி. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தனலட்சுமியை சமாதானம் செய்து அஸீம் வெளியே அழைத்து செல்கிறார்.
அப்போது குறுக்கே வரும் விக்ரமன் தனத்திடம் என்னவென்று விசாரிக்க அவர் அசல் செய்ததை சொல்கிறார். அப்போது அஸீம் தனம் வா நாம போகலாம் என கூப்பிட, நீ இருப்பா அவங்க பேசட்டும் என விக்ரமன் தெரிவிக்கிறார்.உடனே உனக்கென்ன பிரச்சனை நான் உன்கிட்ட பேசசல என அஸீம் எகிற, உன்கிட்ட நாம் பேசுனனா என பதிலுக்கு விக்ரமனுக்கு கொந்தளிக்கிறார். இப்படி சென்று கொண்டிருக்கையில் நடுவே தலைவர் ஜிபி முத்து வந்து, எதுக்கு நீங்க வர்றீங்க. அவங்க பேசிட்டு இருக்காங்களே என சொல்ல, அந்த பொண்ணு அழுதுட்டு போகுதே என்னன்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன் என விக்ரமன் பதில் சொல்கிறார்.
அதற்கு எல்லாரும் தானே அழுறாங்க. அதுக்கு என்ன செய்ய முடியும் என ஜிபி முத்து பேச, நான் மட்டும் வந்தா எங்கிருந்து வருது. என்ன பார்த்தா இளக்காரமா இருக்கா...தயவுசெஞ்சு நிறுத்துங்க. நான் பார்த்துட்டே தான் இருக்கேன். நீங்க ஊர்காரரு. அதனால உங்களுக்கு நான் மரியாதை கொடுத்துட்டு இருக்கேன் என விக்ரமன் கூறுகிறார். மரியாதை கொடுத்த கொடுங்க. இல்லாட்டி போங்க. நான் எல்லாருகிட்டயும் இதைத்தான் சொல்றேன் தெரிவிக்கிறார்.
உடனே நடுவில் வந்து விக்ரமனை அழைத்து செல்லும் ஏடிகேவிடமும் விக்ரமன் எகிற, பதிலடி கொடுக்கும் வகையில் உங்களுக்கு யார் என்ன பேசுனாலும் தப்புதானா என கடுப்பாகிறார்.விக்ரமன் தனத்திடம் கேட்டதில் தப்பில்லை என்றாலும் இடம் பொருள் பார்த்து பேசினால் இன்னும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.