கதை சொல்லும் நேரம் எனும் டாஸ்க்கில், ஜி.பி முத்து அவரின் கதையை விவரிக்க தொடங்க, மற்ற போட்டியாளர்கள் மூன்று பஸ்சரை அழுத்தி டிக் டாக் நாயகனை மொக்கை செய்தனர்.
கதை சொல்லும் நேரம் டாஸ்க் :
இந்த வார டாஸ்க் ஆக “கதை சொல்லும் நேரம்” கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வரிசை எண் படி கதை சொல்லலாம் என்றும், லிவிங் ஏரியாவில் 3 பஸ்சர்கள் வைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டியாளர்கள் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது கேட்டுக் கொண்டிருக்கும் சக போட்டியாளர்கள் 60 நொடிகளுக்குள் 3 பஸ்சர்களை அழுத்தினால் கதை நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம். அப்படி ஒன்று அல்லது 2 பஸ்சர்கள் மட்டும் அடிக்கப்பட்டால் தொடர்ந்து அவர்கள் கதை சொல்லலாம் என்று முதல் ப்ரோமோ பார்க்கும் போது புரிந்தது.
இதில், அனைவரும் தங்களின் கடந்த வாழ்க்கை கதையை உருக்கத்துடன் பேச துவங்கினர். ஷிவின் கணேசன், தன் கதையினால் மற்ற போட்டியாளர்களையும், பிக் பாஸ் ரசிகர்களையும் கண் கலங்க செய்தார்.அந்த வரிசையில், விகரமன் “ நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது” என்று பேச துவங்கிய போது, மூன்று பஸ்சரை அழுத்தி, விக்ரமனை கதை சொல்ல விடாமல் தவிர்த்தனர். அதற்கு ஜி.பி முத்து “ கை தட்டவும் செய்யராங்க, பஸ்சர் அடிக்கவும் செய்யராங்க, யாருயா நீங்கலாம்” என்று கூறினார்.
அனைத்து டாஸ்க்குகளிலும் கலக்கும் ஜி.பி முத்து, “நண்பர்களே நான் கஷ்டப்பட்ட குடும்பத்தில்தான் பிறந்தேன். மூன்றாவது வரைக்கும்தான் படிச்சுருக்கேன். சின்ன வயதில் இருந்து வேலை பாத்தேன். அப்புறம் கடை வெச்சேன். டிக்டாக் வந்துச்சு, டிக்டாக் மேல் கிறுக்காகிவிட்டேன்.” என்று சொல்லிக்கொண்டு இருந்த போது “ ஏலே அடிங்களே” என்று அவரே மற்றவர்களிடம் பஸ்சரை அடிக்க சொன்னார். பின், கதையை விவரிக்க துவங்கிய ஜி.பி முத்துவிடம், பிக் பாஸ், “உங்கள் கதை நிராகரிக்கப்பட்டது.” என்று சொன்னார். அவரே அவர் கதையை சொல்ல முடியாமல், பஸ்சரை அடிக்க சொன்ன வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.
பிக் பாஸ் போட்டியாளர்கள் :
இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை மைனா நந்தினி உள்ளே வந்துள்ளார்