பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் விளையாட்டாக லவ் புரோபோஸல் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது.இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
எப்போதும் முதல் வாரம் அடக்கி வாசிக்கும் போட்டியாளர்கள் இந்த சீசனில் முதலிலேயே எகிற ஆரம்பித்ததால் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக அமைந்தது. பஞ்சாயத்துகளும் நடந்ததால் டாஸ்க் தாண்டி அனைவரும் கவனிக்கத்தக்க முகமாக மாறியுள்ளனர். டாஸ்க் மற்றும் அன்றாட வேலைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் ஜாலியாக பேசிக்கொண்டும்,பாடல் பாடியும், கதைகளை பேசியும் நேரத்தை கழிக்கின்றனர்.
அந்த வகையில் ஜனனி, மகேஸ்வரி, ஆயிஷா, ராம், மணிகண்டன், அசால் கோலார் ஆகியோர் கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது டைம்பாஸூக்காக ஒரு போலி ஆடிஷன் நடத்தினர். இதில் லவ் புரோபஸல் செய்வது போல சீன் சொல்லப்பட்டது. முதலில் வந்த மணிகண்டன் ஜனனியிடம் காதல் சொன்னார். அடுத்து அசல் கோளாரு ஜனனியிடம் ராப் பாடல்கள் பாடி என்னை விரும்புகிறாயா இல்லையா? நேரடியாகச் சொல்லுங்கள். உங்கள் பதில் இல்லை என்றால், நான் இனி உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து ராம் ஆயிஷாவிடம் காதல் சொல்வது போல ஆடிஷன் இடம் பெற்றது. இதனைப் பார்த்த பார்வையாளர்கள் ஏற்கனவே 5 சீசன்களில் இப்படி ஆரம்பித்து பல காதல்களை நாங்கள் பார்த்து விட்டோம் என கருத்து தெரிவித்துள்ளனர்.