பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரியாளர் பற்றி பேசப்பட்டு வருகிறது.


கலந்து கொண்ட 20 போட்டியாளர்களில், ஜிபி முத்து அவராகவே வெளியாக , அடுத்தடுத்த வாரங்களில் சாந்தி, அசல் கோலார், ஷெரினா ஷாம், விஜே மகேஸ்வரி, நிவாஷினி , ராபர்ட் மாஸ்டர் மற்றும்  குயின்ஸி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்


இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம், அமுதவாணன், விஜே கதிரவன், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன், ஜனனி  மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 13 போட்டியாளர்கள் உள்ளனர். இதுவரை, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மைனா நந்தினி ஒருவரே, வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தார். 50 நாட்களை கடந்த நிலையிலும், யாருமே புதிதாக நுழையவில்லை.




இந்நிலையில், பிரபல நடிகர் மன்சூர் அலி கான், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வருவார் என்று பேசப்பட்ட நிலையில், அவர் கேட்ட சம்பளத்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்கள்ஒப்புக்கொள்ளவில்லை என்ற காரணத்தினால் தாம் விலகியதாக மன்சூர் பதிலளித்தார்.


அதன் பின், ரச்சித்தாவின் கணவர் தினேஷ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்ற கருத்தும் நிலவிவந்தது. இதற்கு முன்னதாக, இரண்டாவது சீசனில், தாடி பாலாஜி மற்றும் அவரின் மனைவி  பங்குபெற்றனர். திருமண வாழ்க்கையில் பிரிந்து வாழ்ந்த இவர்கள், பிக்பாஸ் மூலம் ஒன்று சேரும் நிலமை ஏற்பட்டது. ஆனால், பிக்பாஸ் முடிந்தவுடன் வெளியே வந்த இவர்கள் இருவரும் தனித்து வாழ்ந்து வருகின்றனர்.






சீசன் 6 நிகழ்ச்சியில், ரச்சித்தாவின் கணவர் வந்தால், இதே சூழ்நிலைதான் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும், வைல்ட் கார்ட் எண்ட்ரி பற்றி ஆர்வமாக இருக்க, தற்போது அந்நிகழ்ச்சியை ஓடிடியில் ஒளிபரப்பாக்கும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தனது இன்ஸ்டாவில், புதிதாக ஒரு பதிவு செய்துள்ளது. அதில், “வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர் யார்? ” என்ற புரியாத புதிரை போட்டு  இருக்கிறது.