பிக்பாஸ் சீசன் 6  நிகழ்ச்சியின் 59 -வது நாளுக்கான முதல் இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகிவுள்ளது.


இந்த வாரத்தின் டாஸ்க் :


ஜாலியாக ரசிக்கக்கூடிய டாஸ்க் இதுவரை கொடுக்கப்படாமல் இருந்த நிலையில் ரசிகர்களின் எண்ணத்தை பிக்பாஸ் நிறைவேற்றியுள்ளார். 


அதாவது ரசிகர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட தமிழ் சினிமாவின் பிரபல கேரக்டர்களாக போட்டியாளர்கள் மாறிக்கொண்டுள்ளனர். வாரம் முழுக்க இதே கெட்டப்பில் இருந்து கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டு அவர்களிடம் இருந்து சன்மானம் பெற வேண்டும்.


இதற்காக போட்டியாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சரோஜாதேவியாக ரச்சிதா, நாய்சேகர் கெட்டப்பில் மைனா, அந்நியன் ஆக விக்ரமன், ஜெகன்மோகினியாக ஷிவின், நேசமணியாக தனலட்சுமி, மைக்கேல் ஜாக்சனாக விஜே கதிரவன், வக்கீல் கெட்டப்பில் அஸிம், ஹீரோ கெட்டப்பில்  ஜனனி, எம்.ஆர். ராதாவாக ஆக அமுதவாணன் என ஆட்டம், பாட்டம் என டாஸ்க் களைக்கட்டுகிறது.    






இன்று வந்த முதல் ப்ரோமோவில், அமுதவாணன், ஏ.டி.கே மற்றும் விக்ரமன் ஆகிய மூவரும் அமர்ந்து கொண்டு வேடிக்கையாக அவர்களுக்கு கொடுக்கபட்ட வேடங்களின் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கிற பெயரில், ஏதோ செய்து வருகின்றனர். ஆனால், இந்த வாரத்தில் பல கண்டென்கள் சிக்கும் என்பது உறுதியாகிவிட்டது.






தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில், அனைத்து போட்டியாளர்களின் முகங்களும் பதிவாகும் வகையில், பிக்பாஸ் வீடே அமர்க்களமாக காணப்படுகிறது. மைனா நந்தினி, நாய் சேகர் வேடத்தில் பார்க்க க்யூட்டாக உள்ளார். வேடிக்கை காமெடி எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், தீ தளபதி பாடல் போல, பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும், போட்டியை சூடுபடுத்தி வருகின்றனர். 



எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் :


இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். கடந்த வாரத்தில் குயின்ஸி வெளியேற்றப்பட்டார்.


எஞ்சிய போட்டியாளர்கள் :


இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன், ஜனனி  மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 13 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.