பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், முதன்முறையாக இரண்டு நபர்கள் எலிமினேட் செய்யப்படவுள்ளனர்.


நேற்று, குறைந்த ஓட்டுகளை பெற்ற குயின்ஸி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இந்த வாரத்தில் அடுத்தடுத்து சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.






இன்று வெளியான முதல் ப்ரோமோவில், கடந்த வாரம் நன்றாக விளையாடிய மணிகண்டா, தனலட்சுமி மற்றும் ஷிவின் ஆகியோர் கேப்டன்சி டாஸ்க்கிற்காக தேர்வு செய்யப்படுகின்றனர். கயிற்றை பிடித்து அப்படியும் இப்படியும் மூவரும் மல்லு கட்டுகின்றனர். இதில் சில மணி நேரம் தாக்குப்பிடித்த ஷிவின் அதில் இருந்து அவுட்டாகிறார். மீதம் மணிகண்டா மற்றும் தனலட்சுமி மட்டும் உள்ளனர். இதில் மணிகண்டா ராஜேஷ் வெற்றி பெற்றால், சினேகனுக்கு அடுத்து மூன்றாவது முறையாக கேப்டனாக பொறுப்பு பெற்ற போட்டியாளராக இவர் மாறுவார். தனலட்சுமி ஜெயித்தாலும், இந்த வாரத்தில் நிறைய கண்டெண்ட் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.







இரண்டாவது ப்ரோமோவில், வாரா வாரம் திங்கள்கிழமையில் தவறாமல் நடக்கும் நாமினேஷன் நடைப்பெற்றது. இதில் ஆயிஷா, ராம் மற்றும் அஸிம் ஆகிய மூவரின் பெயர்களை பலரும் காரணம் கூறி நாமினேட் செய்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. நாட்கள் செல்ல செல்ல போட்டியும் கடினமாகி கொண்டே போகிறது. அந்த வகையில் இப்போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன் இடம்பெறவுள்ளது.


எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் :


இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். கடந்த வாரத்தில் குயின்ஸி வெளியேற்றப்பட்டார்.


எஞ்சிய போட்டியாளர்கள் :


இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன், ஜனனி  மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 13 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.