இந்த வாரம் முழுவதும் “பழங்குடியின மக்களும், ஏலியன்ஷன்ஸ்களும்” என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. கடந்த வார பஞ்சாயத்தில், “அனைவரும் சேஃபாக விளையாடினால், இருப்பதிலே போரிங் ஆன சீசன் என்ற பெயரை வாங்கிவிடுவீர்கள்” என கமல் எச்சரிக்கை கொடுத்த பின்னர், பிக்பாஸ் போட்டியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டனர்.


அத்துடன் இந்தவாரம் பேச்சுவார்த்தையில் தொடங்கிய சண்டை கைகலப்பில் முடிந்தது. அந்த சமயத்தில், பிக்பாஸ் ஹேஷ்டாக் ட்ரெண்டாகியது. மக்கள் பலரும், இந்த வாரம் கமல் என்ன சொல்ல போகிறார்? என்று காத்து வந்தனர்.






அவர்களின் எதிர்ப்பார்ப்புகளையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையில், முதல் ப்ரோமோவில் தோன்றிய கமல்ஹாசன், “ நன்றாக விளையாட ஆரம்பித்தால், சத்தமும் அதிகம் ஆகிவிடுகிறது. சத்தத்திற்கும் வெற்றிக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என உள்ளே இருப்பவர்கள் நம்பி வருகின்றனர். சிலர் விழிப்புடன் இருக்கிறார்கள், சிலர் திறுதிறுவென்று முழித்து வருகின்றனர்.” என பேசினார்.






அதன் பின் வந்த இரண்டாவது ப்ரோமோவில், ப்ரோமோக்களில் இடம்பெற வேண்டும் என்றே செய்யும் போட்டியாளர்கள் யார்? என்று கமல் ஹாசன் கேட்டார். அஸிமை தவிர்த்து மற்றவர்களின் பெயர்களை கூற வேண்டும் என்ற நிபந்தனையையும் முன் வைத்தார். பெரும்பாலோனார், தனலட்சுமியின் பெயரை கூறினர். அஸிம், விக்ரமன் பெயரை கூற, அமுதவாணன், ஆயிஷாவின் பெயரை குறிப்பிட்டார்.






மூன்றாவது ப்ரோமோவில், அஸிம் உங்களை திட்டுகிறேன் என்று நினைக்காதீர்கள்.. அப்படி நினைத்தாலும் அது தப்பி இல்லை என கூறி  கமல் அஸிமுக்கு ரெட் கார்ட் பயத்தை காட்டினார்.


எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் :


இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற கடந்த வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார்.


எஞ்சிய போட்டியாளர்கள் :




இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 13  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது