பிக்பாஸ் என்ற புகழ் பெற்ற நிகழ்ச்சி, ஹிந்தியில் பல காலங்களாக நடந்து வருகிறது. அதனையடுத்து தமிழில் வெற்றிகரமாக 5 சீசன்கள் நடந்து முடிந்து ஆறாவது சீசனும் துவங்கியது. அந்நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி முத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரின் ஆகியோர் வெளியேறியுள்ளனர். தற்போது, வெளியே வந்த ஷெரின் பேட்டியில் பங்குபெற்று, சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.


கேள்வி : இவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்கள். ஏன் உள்ளே தமிழ் பேசவில்லை?


 நான் பேசும் தமிழ் புரியவில்லை என்று கூறினார்கள். இவர்களுக்கே நான் பேசுவது புரியவில்லை என்றால், மக்களுக்கு எப்படி புரியும் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அப்போது என் நம்பிக்கை குறைந்தது. அவர்கள் விரித்த வலையில் நான் மாட்டிக்கொண்டேன் என்பது வெளியே வந்த பிறகுதான் தெரிகிறது. பெயர் சொல்ல விரும்புவில்லை. அது நான் செய்த தவறு.



கேள்வி : நீங்கள் மாடலா அல்லது பாக்ஸரா?


 ஆம், நான் மாடல்தான். ஆனால், பாக்ஸிங் நான் கற்றுக்கொண்டு வருகிறேன். எனக்கு காயம் ஏற்ப்பட்டது, என்னை டான்ஸ் கூட ஆடக்கூடாது என்று மருத்துவர் கூறியிருந்தார். இருப்பினும், என்னால் அப்படியே சும்மா இருக்க முடியாது. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் டாஸ்குகளை செய்யாமல் இருக்க முடியாது.







கேள்வி :  நீங்கள் உங்கள் டாஸ்க்குகளை சரியாக செய்தீரா?


 ஆம், நான் நன்றாக விளையாடினேன்.



கேள்வி :  பொம்மை டாஸ்க் நடக்கும் போது நீங்கள் கீழே விழுந்ததிற்கு யார் காரணம்?


அன்று நடந்த விஷயங்கள் பற்றி மக்களுக்கே தெரியும், நான் கிழே விழுந்த போது தனலட்சுமியின் கையில் என் முடி இருந்தது. அதனால், தனலட்சுமிதான் என்னை தள்ளி விட்டார் என்ற ஒரு முடிவுக்கு வந்தேன்.



கேள்வி : பேனிக் அட்டாக் உங்களுக்கு எந்த வயதில் இருந்து இருக்கிறது?


நான் கீழே விழும்போது, என் காலுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் இருந்தது. அடிபட்டால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். என் வாழ்க்கை மீண்டும் பின்நோக்கி சென்றுவிடும். 5 மாத கஷ்ட காலத்திற்கு பின், எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு சுவாசக்கோளாறு உள்ளது.



கேள்வி : கத்ரினா தெரியுமா..? கதிர் ஷெரினா ?


என்ன சொல்ல வரீங்க.. எனக்கு கதிர் மீதோ அசிம் மீதோ கர்ஷ் கிடையாது. என்னுடைய மிக பெரிய க்ரஷ்ஷே பிக்பாஸ்தான். எனக்கு கதிர் ஒரு நல்ல நண்பர். குயின்சி மற்றும் ஆயிஷா என்னுடைய நல்ல நண்பர்கள். இவர்களுடனான நட்பை நான் தொடர விரும்புகிறேன்.


என்று அந்த பேட்டியில் ஷெரினா தெரிவித்தார்.