Bigg Boss 6 Tamil : முதலில் மணிகண்டன் இப்போது விக்ரமன்.. ரவுண்டு கட்டி அடிக்கும் தனலட்சுமி!

ஸ்வீட் ஸ்டால் டாஸ்க்கில் தனலட்சுமிக்கும் விக்ரமனுக்கும் சண்டை ஆரம்பம் ஆகிறது. அதையடுத்து இருவரும் மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்தனர்

Continues below advertisement

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடந்து வரும் ஸ்வீட் ஸ்டால் டாஸ்க்கில் தனலட்சுமியை கிழே தள்ளிவிட்டு தடாலடி சண்டையில் ஈடுபட்டுள்ளார் மணிகண்டன்.

Continues below advertisement

கடந்த வாரம் தொலைக்காட்சி டாஸ்க் நடந்தது. அதை தொடர்ந்து, பிக்பாஸ் வீடு “ கண்ணா லட்டு திண்ண ஆசையா” மற்றும் “ அட தேன் அட” என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில், அந்த ஸ்வீட் ஸ்டால் 24 மணி நேரம் இயக்கப்பட வேண்டும் என்றும், பலகாரங்களை செய்து ஆர்டர் எடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கல்லாவில் உள்ள பணத்தையும் பொருட்களையும் பாதுகாக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த டாஸ்க்கில், ஸ்வீட் அட்டைகளை பெறுவதற்காக போட்டியாளர்கள் அனைவரும் கூட்டமாக ஒன்று சேர்ந்தனர். பின்பு, ஒருவர் மீது ஒருவர் ஏறி அந்த இடத்தையே ரணளமாக மாற்றிவிட்டனர். இதனால் தனலட்சுமிக்கும் விக்ரமனுக்கும் சண்டை ஆரம்பம் ஆகிறது. இருவரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

தனலட்சுமி : என்ன இது பண்ணாதீங்க அது பண்ணாதீங்க என்று சொல்லாதீங்க. நீங்க சொல்வதை முதலில் நீங்கள் செய்யுங்கள். பின் எங்களிடம் சொல்லுங்கள்.

விக்ரமன் : எனக்கு புரியல.. ட்ரெஸ்ஸை கிழிப்பீங்களா..

தனலட்சுமி : ட்ரெஸ்ஸை புடிப்பேன் என்று சொன்னேன். என் ட்ரெஸ்ஸையும் யாரோ புடிச்சு தூக்கினார்கள்

விக்ரமன் : கேம் என்று வந்தால் அதற்கு ஏற்றவாரு நீங்கள் ட்ரெஸ் பண்ணிட்டு வரனும்.

தனலட்சுமி :  நான் எப்படி ட்ரெஸ் பண்ணனும் என்று நீங்க சொல்லாதீங்க. எனக்கு பிரச்சனை இல்லை.

விக்ரமன் : உங்க ட்ரெஸ்ஸை யாரு பிடித்து இழுத்தது.

தனலட்சுமி :  அது எனக்கு தேவையே இல்லை.

விக்ரமன் : டீசன்சி என்று ஒன்று இருக்கு.

தனலட்சுமி : அப்போ நீங்க டீசன்சியோட விளையாடுங்க.

விக்ரமன் : ஒழுங்காதான் விளையாடுறோம் நாங்க.

தனலட்சுமி : என் கிட்ட வந்து எப்படி ட்ரெஸ் பண்ண வேண்டும் என்று சொல்லாதீர்கள்.

முன்னதாக காலையில் வந்த ப்ரோமோவில், தனலட்சுமியை கீழே தள்ளிவிட்டு அவரின் கையில் இருந்த டப்பா ஒன்றை பிடிங்கி சென்றார் மணிகண்டன். அதன் பிறகு பிக் பாஸ் வீடு முழுவதும் சத்தமும் கூச்சலும் நிறைந்து காணப்பட்டது.இந்த ப்ரோமோவை தொடர்ந்து, இணையத்தில் இவர்கள் சண்டை போடும் காட்சிகள் பகிரப்பட்டு வருகிறது. அதில், மணிகண்டன்தான் சண்டையை ஆரம்பிக்கும் வகையில் நடந்து கொள்கிறார் என்பது தெளிவாக பதிவாகி இருக்கிறது. தனலட்சுமி எந்தவொரு தவறும் செய்யவில்லை என்றும் தெரிகிறது.

இதனையடுத்து வந்த இரண்டாவது ப்ரோமோவில், மணி தனத்தை தள்ளி விடவில்லை என உறுதியாக சொல்ல, கடுப்பில் உள்ள தனம் அவர் தரப்பு நியாயத்தை முன்வைக்கிறார். மணிகண்டனிற்கும் தனலட்சிமிக்கும் ஏற்ப்படும் சண்டையை வைத்தே இன்றைய ஒரு மணி நேர தொகுப்பு நிகழ்ச்சியை ஓட்டிவடுவார்கள் போல..! 

Continues below advertisement