பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடந்து வரும் ஸ்வீட் ஸ்டால் டாஸ்க்கில் தனலட்சுமியை கிழே தள்ளிவிட்டு தடாலடி சண்டையில் ஈடுபட்டுள்ளார் மணிகண்டன்.
கடந்த வாரம் தொலைக்காட்சி டாஸ்க் நடந்தது. அதை தொடர்ந்து, பிக்பாஸ் வீடு “ கண்ணா லட்டு திண்ண ஆசையா” மற்றும் “ அட தேன் அட” என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில், அந்த ஸ்வீட் ஸ்டால் 24 மணி நேரம் இயக்கப்பட வேண்டும் என்றும், பலகாரங்களை செய்து ஆர்டர் எடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கல்லாவில் உள்ள பணத்தையும் பொருட்களையும் பாதுகாக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்க்கில், போட்டியாளர்கள் அனைவரும் மும்மரமாக விளையாடி வருகின்றனர். இன்று வந்த முதல் ப்ரோமோவில், ஸ்வீட் செய்யும் இடத்தில் அனைவரும் குவிந்தனர். பின், தனலட்சுமியை கீழே தள்ளிவிட்டு அவரின் கையில் இருந்த டப்பா ஒன்றை பிடிங்கி சென்றார் மணிகண்டன். அதன் பிறகு பிக் பாஸ் வீடு முழுவதும் சத்தமும் கூச்சலும் நிறைந்து காணப்படுகிறது.
மணிகண்டனும் தனலட்சியும் எகிறிக் கொண்டு சண்டை போட ஆரம்பிக்கின்றனர். மற்ற போட்டியாளர்கள் வந்து இவர்களை சமதானம் செய்கின்றனர். வாடா போடா என கோவப்பட்டு தனம், மணியை திட்டுகிறார். “என்னது வாடா போடா வா என் வயசு என்ன தெரியுமா ”என்று பதில் கூறுகிறார் மணி. வழக்கமாக பிரச்சனை செய்யும் அசிம், இந்த சண்டையை தடுத்து வைத்தார்.
இந்த ப்ரோமோவை தொடர்ந்து, இணையத்தில் இவர்கள் சண்டை போடும் காட்சிகள் பகிரப்பட்டு வருகிறது. அதில், மணிகண்டன்தான் சண்டையை ஆரம்பிக்கும் வகையில் நடந்து கொள்கிறார் என்பது தெளிவாக பதிவாகி இருக்கிறது. தனலட்சுமி எந்தவொரு தவறும் செய்யவில்லை என்றும் தெரிகிறது.
இதனையடுத்து வந்த இரண்டாவது ப்ரோமோவில், மணி தனத்தை தள்ளி விடவில்லை என உறுதியாக சொல்ல, கடுப்பில் உள்ள தனம் அவர் தரப்பு நியாயத்தை முன்வைக்கிறார்.
பிக் பாஸ் போட்டியாளர்கள் :
இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 17 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.