Bigg Boss 6 Tamil: இறுதிக்கட்டத்தை நெருங்கிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் தனலட்சுமியா?
குறைந்த ஓட்டுக்களை பெற்று, தனலட்சுமி கடைசி இடத்தில் உள்ளார். இதனால் அவர் வெளியேற அதிக வாய்ப்புள்ளது என தகவல் பரவிவருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், இந்தவாரம் தனலட்சுமி வெளியேறவுள்ளார் என தகவல் பரவிவருகிறது.
இந்தவாரத்தின் முதல் நாளில் வழக்கம் போல், எலிமினிஷேன் நாமினிஸ்கள் வெளிப்படையாக அனைவரின் முன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நாமினேஷன் முறையில், ஒவ்வொரு போட்டியாளரும் அனைவரின் முன் வந்து, நாமினியின் பெயரை சொல்லி, அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். பின், அவர்களின் முகத்தில் சிவப்பு நிற மார்க் ஒன்றை வரையவேண்டும்.
ரச்சித்தா, மைனா நந்தினி, விக்ரமன், ஷிவின், கதிரவன், அஸிம், தனலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்தில் சுமாராக விளையாடும் ரச்சிதா அல்லது நந்தினி வெளியேற வாய்ப்புள்ளது என மக்கள் அவர்களின் கருத்தை தெரிவித்து வந்தனர்.
தற்போது, குறைந்த ஓட்டுக்களை பெற்று, தனலட்சுமி கடைசி இடத்தில் உள்ளார். விக்ரமன் மற்றும் அஸிம் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். அதற்கு அடுத்து, ஷிவின், ரச்சிதா, கதிரவன், மைனா மற்றும் ரச்சித்தா ஆகியோர் உள்ளனர்.
கடைசி நேரத்தில் இப்போது இருக்கும் சூழல் மாறலாம். ஏனென்றால், கடைசி வாரத்தில் ஏடிகே குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியாக போகிறார் என்ற தகவல் வந்தது. ஆனால், ஜனனியின் எவிக்ஷன் பெரிய ட்விஸ்டாக அமைந்தது.அதனால், ரச்சித்தா, மைனா, கதிரவன் அல்லது தனலட்சுமி வெளியேற வாய்ப்புள்ளது. எலிமினேஷன் குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.