இன்று ஒளிப்பரப்பாக போகும் நிகழ்ச்சியில், பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக செய்யப்பட்டுள்ள மாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது 


வாரத்தின் துவக்கத்தில், எலிமினேஷன் நாமினேஷன் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கேப்டன்சி டாஸ்க் நடந்தது; இதன் பின்னர், இந்தவாரம் முழுவதும் விளையாடப்படும் டாஸ்க் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது.


பிக்பாஸ் ஆரம்ப பள்ளி


பிக்பாஸ் வீட்டில் பள்ளிக்கூடம் டாஸ்க் நடைபெற்று வந்தது; இதில் மாணவர்களாக மாறிய போட்டியாளர்கள், ஆசிரியர்களாக இருக்கும் போட்டியாளர்களிடம் மழலை மொழியில் பேசி அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்; ஆசிரியர்களாக இருக்கும் போட்டியாளர்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுக்கொடுத்து தேவையான அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும். 


வழக்கத்திற்கு மாறாக மாறிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறை


பிக்பாஸ் நிகழ்ச்சியில், லக்சரி பட்ஜெட் டாஸ்க், கேப்டன்சி டாஸ்க், வாரம் முழுவதும் விளையாடப்படும் டாஸ்க் என மூன்று முக்கியமான டாஸ்க்குகள் உள்ளது. பொதுவாக வாரத்திற்கான டாஸ்க்குகள் செவ்வாய் கிழமை துவங்கி வெள்ளி கிழமை வரை நடைபெறும்.  இந்த வாரம் ஆரம்ப பள்ளி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆனால், வார நாட்கள் முடிய, இரண்டு நாட்கள் மட்டும் உள்ள நிலையில், புதியதொரு டாஸ்க் கொடுக்கப்பட்டு, பழைய டாஸ்க் மாற்றப்பட்டுள்ளது.






இதுவரை அனைத்து சீசன்களிலும் ஹிட்டாக இருந்த ஸ்கூல் டாஸ்க்  இந்த சீசனிலும் கொடுக்கப்பட்டது. அதனால் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த பல கண்டெண்ட் சிக்கும் என்ற எதிர்ப்பார்பும் இருந்தது. அந்த எதிர்ப்பார்ப்பு ஏமாற்றப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் இரண்டாவது டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. 


ஒரு பக்கம் பிக்பாஸ் டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்து வருவதாகவும், அதனால் கமல் இந்த நிகழ்ச்சியை விட்டு நீங்க போகிறார் என்றும் தகவல் பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தன் விதிமுறையை மாற்றி அமைப்பதையும், இந்நிகழ்ச்சியின் ரேட்டிங் குறைந்து வருவதாக வெளிவந்த தகவலையும் உற்று நோக்கும் போது, நிஜமாக கமல் வெளியேறிவிடுவார் என்பது தோன்றுகிறது. இன்றுடன் 74 வது நாளை வெற்றிகரமாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அடைந்துள்ளது.


மேலும் படிக்க :Kamalhassan quits Bigg Boss: குட் பை பிக் பாஸ்... விலக தயாரான கமல்ஹாசன்... குறையும் டிஆர்பி தான் காரணமா?