Bigg Boss 6 Tamil : நெருங்கிய எலிமினேஷன்.. பிக்பாஸிடம் அழுது மன்னிப்பு கேட்ட தனலட்சுமி.. காரணம் என்ன?

இனிமே யோசித்துதான் பேச போகிறேன். மக்கள் ஓட்டு போடவில்லை என்றால் பரவாயில்லை. நான் சொன்னதால் என்னை நீங்கள் வெளியேற்றி விடாதீர்கள் என தனலட்சுமி பேசியுள்ளார்.

Continues below advertisement

ஸ்வீட் ஸ்டால் டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் போது கோபமாக பிக்பாஸை திட்டிய தனலட்சுமி இன்று, அதே பிக்பாஸிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

Continues below advertisement

இந்த வாரம் முழுவதும், ஸ்வீட் ஸ்டால் டாஸ்க் மும்மரமாக நடந்து முடிந்தது. அந்த டாஸ்க்கினால் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்னைகளும் மனஸ்தாபங்களும் ஏற்பட்டது. எப்போதும் தாம் தூம் என குதித்து வீட்டையே ரணகளமாக்கும் தனலட்சுமி, அழுகாத குறையாக முகத்தை வைத்துக்கொண்டு பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

ஆம், ஸ்டோர் ரூம் உள்ளே சென்ற தனம், கேமரா முன் சென்று, “இன்விசிபிள் டாஸ்க் கொடுத்தீங்க, அதை நான் தவறாக புரிந்து கொண்டேன். இன்விசிபிள் டாஸ்க் என்றால் மற்றவர்களை எரிச்சல் அடைய செய்வது அல்ல என்பதை நான் பிறகே உணர்ந்தேன். நான் கோபப்பட்டுக்கிட்டே இருக்கேன். நான் இந்த வீட்டை விட்டு போறேன் என்று அடிக்கடி சொல்றேன். 

எமோஷனலாக இருக்கும் போது நான் அப்படி பேசி விடுகிறேன்.ஆனால், நான் அதை திரும்ப சொல்ல மாட்டேன். இந்த வாய்ப்பை நான் கஷ்டப்பட்டு பெற்றுக்கொண்டேன். நான் இப்படி சொல்வதால் என்னை இந்த வீட்டை விட்டு அனுப்பாதீர்கள்.  ரொம்ப ரொம்ப சாரி. 

நான் பேசுவதை ஒளிபரப்பாதீர்கள். நெருக்கமானவர்களிடம் நான் உரிமையை எடுத்துக்கொள்வேன். அதனால்தான் உங்களிடம் அப்படி பேசினேன். இனிமே யோசித்துதான் பேச போகிறேன். மக்கள் ஓட்டு போடவில்லை என்றால் பரவாயில்லை. நான் சொன்னதால் என்னை நீங்கள் வெளியேற்றி விடாதீர்கள். முதலில், எப்படி இருந்தேனோ அப்படியே இருக்கிறேன். அனைத்து டாஸ்க்குகளிலும் நன்றாக விளையாடுகிறேன்.” என கொஞ்சம் நேரமாக மன்னித்தீர்களா..மன்னித்தீர்களா என்று கேட்டபடியே இருந்தார் தனலட்சுமி. கடைசி வரை, பிக்பாஸ் அவரிடம் மன்னித்து விட்டேன் என்று சொல்லவே இல்லை.

இதற்கு முன்பு, பிக்பாஸிடம் தெனாவட்டாக பேசிய தனம், இப்போது கெஞ்சி பேசியுள்ளார். வார இறுதிநாள் வந்துவிட்டதால் தனத்திற்கு சற்று பயம் வந்து விட்டது போல. பிக்பாஸ் இவரை வெளியே அனுப்பாமல் இருந்தால் கூட, மக்கள் சில வாரங்கள் கழித்து இவருக்கு ஓட்டு போடாமல் வெளியே அனுப்பி விடுவார்கள் என்பது உறுதி. இந்த வாரத்தின் எலிமினேஷன் நாமினியாக தனலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil : ‘எங்களுக்கு உதாரணமா நடந்துக்குங்க’ - பிக்பாஸை வம்புக்கிழுத்த தனலட்சுமி.. வைரல் வீடியோ!

Continues below advertisement