பிக்பாஸ் நிகழ்ச்சியில் அம்மாவை பற்றி பேசுகையில் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் கண்கலங்கியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில், முந்தைய சீசன்களை விட இந்த சீசன் ரொம்ப மொக்கையாக சென்று கொண்டிருக்கிறது. டாஸ்கிலும் சரி, வீட்டில் பிற விஷயங்களிலும் சரி போட்டியாளர்கள் ஆர்வம் காட்டாமல் எனக்கென்று இருக்கிறார்கள்.






இதனிடையே இந்த வாரம்  தமிழ் சினிமாவின் பிரபல கேரக்டர்களாக போட்டியாளர்கள் மாறிக்கொண்டு ஆட்டம், பாட்டம் என பிக்பாஸ் வீடே களைக்கட்டியது. ஆனால் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன், அடுத்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என்ற குண்டை தூக்கிப் போட்டார். இதனால் போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க படாதபாடு படுகின்றனர். 






இதற்கிடையில் நேற்றைய முதல் எவிக்‌ஷனில் ராம் வெளியேற்றப்பட்ட காட்சிகள் இடம் பெற்றது. இன்று ஆயிஷா வெளியேறும் காட்சிகள் இடம் பெறவுள்ளது. இதனை தொடர்ந்து இன்றைய நாளுக்கான ப்ரோமோக்களும் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ’அம்மா அப்பா’ பற்றி போட்டியாளர்களிடம் கமல் பேச சொல்கிறார். அப்போது மைனா எழுந்து, அவங்க எனக்கு அம்மா அப்பா கிடையாது.இரண்டு பேரும் என்னுடைய குழந்தைகள் தான். அவர்களை நான் நிஜமாக மிஸ் செய்கிறேன் என தெரிவிக்கிறார்.


இதே போல அஸிம் எழுந்து, வெளியே எவ்வளவுதான் ஸ்ட்ராங்காக இருந்தாலும் உள்ளுக்குள்ளே அந்த ஃபீல் இருக்கும் தானே எனக்கு அந்த ஃபீல் இருக்கு என கூறுகிறார். இதனை அடுத்து விஜே கதிரவன் எழுந்து நீங்கள் போட்ட சின்ன பிச்சை தான் நான் இங்கே இருக்கிறதுக்கு காரணம் என கூறுகிறார். உடனே கமல்,  எல்லாரும் அம்மா அப்பா பத்தி பேசினீங்க. இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. இதை தெளிவாக சொல்லாமலேயே நாம் அவர்களை இழந்து விடுவோம். அப்படியான குழந்தைதான் நான். சோ உங்கள பாத்து பொறாமையா இருக்கு எனக்கு கிடைக்காதது உங்களுக்கு கிடைச்சிருக்கு என சொல்லி கண் கலங்குகிறார். இதனைக் கண்டு போட்டியாளர்களும் கண் கலங்குகின்றனர்.