வழக்கமாக, வாரநாட்களில் 10 மணிக்கு வெளியாகும் முதல் ப்ரோமோ, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சற்று லேட்டாகதான் வெளியாகும். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் ஆறாவது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகிவுள்ளது. இதில் தொகுப்பாளராக களம் இறங்கிய கமல் பார்க்க ஸ்மார்டாக உள்ளார்.
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல். தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
சற்று நேரத்திற்கு முன்பு, வெளியான ப்ரோமோவில், “ கடந்த ஐந்து சீசன்களில் இல்லாத ஒரு அதிரடி ஆரம்பம் . வழக்கமாக 40-வது நாளில் நடக்கவேண்டிய கலாட்டா, இப்பவே நடக்க ஆரம்பித்துவிட்டது. விசாரிப்பதற்கும், கேட்பதற்கும் நிறைய கேள்விகள் உள்ளது. இன்று இரவு.!” என கர்ஜனையாக பேசியுள்ளார்.
அதுபோல், இரண்டாவது ப்ரோமோவில், சாந்தியை பார்த்து “வரும் போதே சொல்லி அனுப்பினேன், கொஞ்சம் ஏமாந்த உங்களுக்கே உப்மா கொடுத்துடுவாங்க.” என்றும், மகேஸ்வரியை பார்த்து, “ அடிக்கடி முட்டிகிறீங்க போல.. ஐ மீன் கண்ணாடிய சொன்னே.” என்று நக்கலாக இந்த வாரம் வீட்டில் நடந்த நிகழ்வுகளை குறிப்பிட்டு கமல் கூறினார்.
பின், முத்துவை எழுந்து நிக்க சொல்லிய கமல் “ உங்களுக்காக ஒரு விஷயம் வெச்சிருக்கேன்” என கூறினார். உடனே ஜி.பி.முத்துவிடம் பாக்ஸ் ஒன்றை காட்டி அதில் என்ன இருக்கிறது என கமல் கேட்க, அவரோ “பாதாம்” என சொன்னார். அதற்கு பதிலாக “பாதாம் தெரியுது ஆதாம் தெரியல. எவ்வளவு வருத்தபடுறாரு தெரியுமா ஆதாம் ” என நகைத்தார். ”அது அது ஆதாமா...எங்க இருக்காரு ”என ஜிபி முத்து சொல்ல அனைவரையும் சிரித்தனர்.
வாரந்தோறும் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் மொத்தமாக சேர்த்து வைத்து, வார இறுதியில் பஞ்சாயத்து நடத்துவதே பிக்பாஸ் நிகழ்ச்சியின் வழக்கம். இதில், நல்லது - கெட்டது, சண்டை - சச்சரவு, காதல் - மோதல், புகழ்ச்சி - இகழ்ச்சி என அனைத்து விஷயங்களும் விசாரிக்கப்படும். அந்தவகையில், முதல் வாரத்திற்கான பஞ்சாயத்து எப்படி இருக்கும் என காத்திருந்து பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil : பிக்பாஸ் வீட்டில் வித்தை காட்டிய ஆயிஷா.. வாயை பிளந்த சக போட்டியாளர்கள்..!