Bigg Boss 6 Tamil Promo: ஷிவின் அம்மாவை கேவலமாக பேசினாரா தனலட்சுமி...பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை..!

இந்த சீசன் ரொம்ப மொக்கையாக சென்று கொண்டிருக்கிறது. இதனை வாரா வாரம் கமல் சுட்டிக்காட்டினாலும் டாஸ்கிலும் சரி, வீட்டில் பிற விஷயங்களிலும் சரி போட்டியாளர்கள் ஆர்வம் காட்டாமல் எனக்கென்று இருக்கிறார்கள். 

Continues below advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் ஷிவினை தனலட்சுமி அழவைத்த காட்சிகள் இடம் பெற்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Continues below advertisement

ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் ரொம்ப மொக்கையாக சென்று கொண்டிருக்கிறது. இதனை வாரா வாரம் கமல் சுட்டிக்காட்டினாலும் டாஸ்கிலும் சரி, வீட்டில் பிற விஷயங்களிலும் சரி போட்டியாளர்கள் ஆர்வம் காட்டாமல் எனக்கென்று இருக்கிறார்கள். 

கடந்த வாரம் எலிமினேஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடர்பான காட்சிகள் நேற்று ஒளிபரப்பானது. இதில் குயின்ஸி, ரச்சிதா, தனலட்சுமி, ஜனனி ஆகியோர் பெயர்கள் அதிகமுறை அடிப்பட்டது இதில் இந்த வாரம் குயின்ஸி வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் அஸிம் பிக்பாஸ் வீட்டின் இந்த வாரம் கேப்டனாக மாறிய நிலையில் அணி பிரிப்பதில் அவர் எடுத்த முடிவு சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

குறிப்பாக சமையல் டீமில் இதுவரை பெண் போட்டியாளர்கள் இருந்த நிலையில் முதல்முறையாக ஆண்கள் அணி களமிறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் வகையில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்க் சுவாரஸ்யமாக இருக்குமா என்னும் கேள்வியெழுந்துள்ளது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

அதில் ஏலியனாக வேடமிட்டுள்ள தனலட்சுமி பழங்குடியின மக்களிடம் மாட்டிக் கொள்கிறார். அப்போது ஷிவின் கேமுக்காக எனது அம்மாவை பத்தி பேசுவியா நீ  என தனத்திடம் கேட்க, டாஸ்க் ஆக பேசுனேன் என அவர் சொல்கிறார். உங்க அம்மாவை பார்த்தா கேவலாமா இருக்குன்னு சொல்ற, என்னைக்காவது டாஸ்க் ஆக உன்னை நான் கேவலமாக பேசியிருக்கனா?.. உனக்கு தெரியும் எனக்கு அம்மா எவ்வளவு டச் பண்ற விஷயம்ன்னு..தெரிஞ்சும் என்ன பார்த்து எப்படி அப்படி கேட்கலாம் என ஷிவின் கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்.

உனக்கு வேணும்னா என் ஃபீலிங் புரியாம இருக்கலாம். எனக்கு அப்படியில்ல என ஷிவின் சொல்ல, சக போட்டியாளர்கள் சமாதானப்படுத்துகின்றனர். பாத்ரூம் ஏரியாவில் ஷிவின் மைனாவிடம் கதறி அழும் காட்சிகள் தனலட்சுமி மீது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement