பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும், பிக்பாஸ் நீதிமன்றம் என்ற டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில், 
ஒவ்வொருவராக பிக்பாஸ் கேமரா முன் சென்று, அவர்களின் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர் அவருக்கான வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும்.


இந்த வாரத்தில் வெளிவந்த ப்ரோமோக்களும் சரி, ஒரு மணி நேர தொகுப்பும் சரி எல்லாமே சற்று போர் அடிக்கும் வகையில் இருந்தது. சாதரணமாகவே, அனைத்து விஷயங்களுக்கும் அடித்துக்கொள்ளாத வகையில் சண்டை போடும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு, அல்வா போன்று வாதம் செய்வதற்கே பிக்பாஸ் நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. 


இதில் போட்டியாளர்கள் சரியாக விளையாடி அவர்களை பேசும் பொருளாக மாற்றி இருக்கலாம். ஆனால், அவர்களோ வளவளவென்று பேசியே கொன்றனர். இதனால் மீம்ஸ் போட்டு தள்ளும் இணைய வாசிகளுக்கும் எந்தவொரு கண்டெண்ட்டும் கிடைக்கவில்லை. எப்போதும் பிரச்னைகளுக்கு பஞ்சாயத்து செய்யும் கமல், இம்முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் சேஃப் கேம் விளையாடுகிறார்கள் என்ற குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.


ப்ரோமோக்களின் தொகுப்பு : 






இன்று வந்த முதல் ப்ரோமோவில், “ நீதிமன்றம் விசித்தரமான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. விசித்தரமான மனிதர்களையும் சந்தித்துள்ளது. ஆனால், இந்த விச்சித்திர வழக்கில் யார் குற்றம் செய்தார்கள் என்பது தெரியாமலே தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தது யார் என்று தெரியவில்லையா.. இல்லை தெரிவிக்க விரும்பவில்லையா.. இவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்களே.. என்ன செய்யலாம்.” என்று மக்களின் மனதில் இருப்பதை அப்படியே பேசினார் கமல்.






இதைதொடர்ந்து வந்த இரண்டாவது ப்ரோமோவில், கதிரவன் தாக்கல் செய்த பொதுநலன் வழக்கு குறித்து கமல் கேள்வி கேட்கிறார். பின், குற்றவாளிகள் யார் என கேட்டு அவர்களை நிற்கவைத்தார். அதில் பேச துவங்கிய அவர், “ நான் விசாரிக்கும் போது பெயர்களாவது வெளியே வந்தது. இப்படி சேஃபாக விளையாடினால், இருப்பதிலே போரிங்கான சீசன் என்ற பெயரை வாங்கி செல்வீர்கள்.” என்ற உண்மையை பதிவு செய்தார் கமல்.


இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர் யார்?


குறைந்த ஓட்டுக்களை பெற்று, பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார் என்ற தகவல் பரவி வருகிறது.